முகப்பு
வணிகம்

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 6,911 உயர்வு!

இன்றைய ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 6,911 உயர்ந்து ரூ. 2.26 லட்சத்தை எட்டியது.

Updated On : 27 மார்ச் 2026, 8:10 pm IST
கட்டி வெள்ளி
பகிர்:

புதுதில்லி: அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றங்கள் தற்காலிகமாகத் தணிந்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் மீண்டும் வர்த்தகத்துக்கு திரும்பியதால், இன்றைய ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 6,911 உயர்ந்து ரூ. 2.26 லட்சத்தை எட்டியது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், மே மாத விநியோகத்திற்கான வெள்ளி விலை ரூ. 6,911 உயர்ந்து கிலோ ரூ. 2,26,785-ஐ தொட்டது.

முந்தைய வர்த்தக அமர்வில், வெள்ளியின் விலை ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் ரூ. 14,960 சரிந்து, கிலோவுக்கு ரூ. 2,19,874 என்ற அளவில் நிறைவடைந்தன.

Advertisement

Advertisement

சர்வதேச சந்தையில், காமெக்ஸில் மே மாத ஒப்பந்தத்திற்கான வெள்ளியின் ஃபியூச்சர்ஸ் விலை, அவுன்ஸ் ஒன்றுக்கு 2.02 அமெரிக்க டாலர் உயர்ந்து 69.96 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Silver prices rebounded by Rs 6,911 to Rs 2.26 lakh per kilogram in futures trade on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.