தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 5) சவரனுக்கு ரூ. 1,440 குறைந்துள்ளது.
மேற்கு ஆசிய போர்ப் பதற்றம் காரணமாக தங்கம் விலை சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த மே 2-ஆம் தேதி தங்கம் கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.14,000-க்கும், சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,440 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,10,560-க்கும் கிராமுக்கு ரூ. 180 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 265-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
In Chennai, the price of ornamental gold has decreased by Rs. 1,440 per sovereign today (May 5).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.