அரசியல் அரங்கம்

தொகுதியில் நிறைய பணிகளை மேற்கொண்டுள்ளேன்: துரை.ரவிக்குமார்

சிதம்பரம், மார்ச் 19: 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தொகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளேன் என காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வும், விடுதலைச் சிறுத்தைகள்

தினமணி

சிதம்பரம், மார்ச் 19: 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தொகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளேன் என காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக

 அறிவிக்கப்பட்டுள்ள துரை.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

 ÷இது குறித்து அவர் தெரிவித்தது: 2007-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்ணுரிமை மாநாட்டில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கூரைவீடுகளை அகற்றி கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன். ÷சட்டமன்றத்திலும் குரல் கொடுத்ததன் விளைவாக இலவச கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

 ÷இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் முயற்சியால் விளைந்த பயனாகும். இத்தொகுதி மக்களின் 50 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையான கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே முட்டம்- மணல்மேடு பாலத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 ÷அதுமட்டுமல்லாமல் நாஞ்சலூர், கடவாச்சேரி ஆகிய பகுதிகளில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதியில் மிக மோசமாக இருந்த சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 ÷அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு எனது சொந்த செலவில் கணினி வாங்கிதந்துள்ளேன். தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு நிரந்தர நிவாரணமாக கொள்ளிடக் கரை ரூ.108 கோடி செலவில் உயர்த்தப்பட்டு பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

 ÷மேலும் வீராணம் ஏரியை ஆழப்படுத்தி தூர்வாரும் பணி மேற்கொள்ள பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்கால் ஓடை உள்ளிட்ட ஓடைகளை அகலப்படுத்தி, கரைகளை பலப்படுத்தும் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டேன்.

 ÷தொகுதி மேம்பாட்டு நிதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநாரையூர், நந்திமங்கலம் ஆகிய இடங்களில் தலா ரூ.26 லட்சம் செலவில் வெள்ளப் பாதுகாப்பு மையங்களை உருவாக்கியுள்ளேன்.

 ÷ரெட்டியூர், நாஞ்சலூர், கடவாச்சேரி உள்ளிட்ட இடங்களில் சமுதாய நலக்கூட்டஙளை அமைத்துள்ளேன். நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் அறிவியல் ஆய்வுக் கூடம் அமைத்துள்ளேன். ரூ.5 லட்சம் செலவில் மாணவர்கள் அமருவதற்கு வசதியாக நாற்காலி, பெஞ்சுகள் வழங்கியுள்ளேன்.

 ÷தொகுதி பக்கமே வரவில்லை எனக் கூறுவது முற்றிலும் தவறானதாகும். மேற்கண்ட சாதனைகள் காட்டுமன்னார்கோவில் தொகுதி மக்கள் எமது கட்சிக்கு அளித்த அங்கீகாரத்தினாலும், ஊக்கத்தினாலும் நிகழ்த்தப்பட்டவை என துரை.ரவிக்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ-வாக முதல் தமிழர்! யார் இந்த பாலாஜி?

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்! பயணிகள் கடும் அவதி

இன்னும் நாணமோ... டெல்னா டேவிஸ்!

SCROLL FOR NEXT