கிச்சன் கார்னர்

உருளைக்கிழங்கு பாலக் மசாலா

செய்முறை: உருளைக் கிழங்கை நன்றாக அலம்பிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெய்விட்டு வதக்க வேண்டும்.

சுவாதி

தேவையானவை:

பசலைக் கீரை - கால்கிலோ

உருளைக் கிழங்கு - கால்கிலோ

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - 2

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

கொத்துமல்லி - 1 பிடி

எண்ணெய், உப்பு - தேவையானது

செய்முறை: உருளைக் கிழங்கை நன்றாக அலம்பிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெய்விட்டு வதக்க வேண்டும். இவற்றுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய பசலைக் கீரையைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு பிறகு தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் நீர்விட்டு மெதுவான சூட்டில் வேகவைக்க வேண்டும். இறக்கிய பின்பு கொத்துமல்லி தழையைக் கிள்ளித் தூவ வேண்டும்.

உருளைக்கிழங்கு பாலக் மசாலா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT