தக்காளி ஜவ்வரிசி வற்றல்
செய்முறை: தக்காளியை மிக்ஸியில் கூழாக அரைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 5
ஜவ்வரிசி - ஒரு கிண்ணம்
Advertisement
இஞ்சிச் சாறு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - ஒன்று
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: தக்காளியை மிக்ஸியில் கூழாக அரைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஜவ்வரிசியை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தக்காளிக் கூழ், இஞ்சிச் சாறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறவும். பிறகு, அடுப்பை அணைத்து இறக்கி வைத்து, எலுமிச்சை பழத்தைப் பிழிந்து கலக்கவும். இந்தக் கலவையை ஆறியதும் சிறிது சிறிதாக எடுத்து, பிளாஸ்டிக் பேப்பர் அல்லது சுத்தமான துணியில் ஊற்றிப் பரப்பி காயவிடவும். நன்றாக காய்ந்த பிறகு எடுத்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.
இதே முறையில் புதினாவிலும் செய்யலாம். பச்சைநிறத்தில் நல்ல வாசனையாகவும் இருக்கும்.
•••