காளான் குழம்பு
செய்முறை: தேங்காய், மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய்
தேவையானவை:
நறுக்கிய காளான் - ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம் - 10
Advertisement
தேங்காய் துண்டுகள் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - 3 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தலா - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி,
உப்பு } தேவையான அளவு.
செய்முறை: தேங்காய், மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய காளான், சின்ன வெங்காயம், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளித்து, மூடி விடவும். லேசாக வெந்ததும் மூடியைத் திறந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, காளான் வேகும்வரை கொதிக்க வைத்து இறக்கவும்
•••