கம்பு தோசை
செய்முறை: கம்பு மாவுடன் தோசை மாவு, உப்பு சேர்த்து, தோசை ஊற்றும் பதத்துக்குக் கலந்து, தோசைக்கல்லி
தேவையானவை:
கம்பு மாவு - 1 கிண்ணம்
தோசை மாவு - 2 கரண்டி
Advertisement
பச்சைமிளகாய் - 1
நறுக்கிய வெங்காயம் - 1
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப.
செய்முறை: கம்பு மாவுடன் தோசை மாவு, உப்பு சேர்த்து, தோசை ஊற்றும் பதத்துக்குக் கலந்து, தோசைக்கல்லில் ஊற்ற வேண்டும். அதன் மேலே நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்துமல்லி தூவி, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
பலன்கள்: கால்சியம், புரதம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, மாதவிலக்குப் பிரச்னைகள் நீங்கும்.
••