முகப்பு
ஆராய்ச்சிமணி

கழிவுநீர் வடிகால் இல்லை!

மாதவரம் மண்டலம் 24 ஆவது வார்டான சூரப்பட்டு சென்னை மாநகராட்சியுடன் அண்மையில் இணைக்கப்பட்ட பகுதியாகும்.

Updated On : 25 ஆகஸ்ட், 2014 at 3:49 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:05 PM

மாதவரம் மண்டலம் 24 ஆவது வார்டான சூரப்பட்டு சென்னை மாநகராட்சியுடன் அண்மையில் இணைக்கப்பட்ட பகுதியாகும். இங்கு தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள எழில் நகரில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்புகளில் கழிவுநீர் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.

மேலும், கழிவுநீர் சாலையில் திறந்துவிடப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லை உள்பட பல்வேறு தொந்தரவுகளை இந்த பகுதி மக்கள் சந்தித்துவருகின்றனர். இந்தக் குறையை போக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.