ஆபத்தான கட்டடத்தில் நியாயவிலைக்கடை
திருவான்மியூர் எல்.பி. சாலையிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் கட்டடம் தற்போது பழுதாகி இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது.
திருவான்மியூர் எல்.பி. சாலையிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் கட்டடம் தற்போது பழுதாகி இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தக் கட்டடத்தில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.
இதனால், இந்தக் கடையில் பொருள்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அச்சத்துடனே பொருள்களை வாங்கிச்செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த நியாயவிலைக் கடையை இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.