முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 33

முருகா! என் மனமோ எப்போதும் பெண்களை நாடி ஓடுகிறது. அவர்களுடைய கூந்தலோ என்றால், சாதி மல்லிகையைச் சூடியும், வாரிக் கட்டப்பட்டும்,

Updated On : 19 அக்டோபர், 2015 at 3:22 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:30 PM

நெச்சுப் பிச்சி திருவேங்கடத் திருப்புகழுக்கு சுருக்கமான பொருள் விளக்கம் -

முருகா! என் மனமோ எப்போதும் பெண்களை நாடி ஓடுகிறது. அவர்களுடைய கூந்தலோ என்றால், சாதி மல்லிகையைச் சூடியும், வாரிக் கட்டப்பட்டும், இருட்டையும் தன் கரிய நிறத்தால் வெல்வதும்; மேலும்மேலும் அலங்காரம் செய்யப்பட்டு, ஆடவர்களைச் சுண்டியிழுப்பதும், கஸ்தூரிக் கலவை பெருகுவதுமாக இருப்பது.

அவர்களுடைய நெற்றியோ, அழகிய ஒளிவீசும் பச்சைப் பொட்டு இட்டுக் கொண்டு, மன்மதன் வில்லோ, இந்திர தனுசான வானவில்லோ என்று பிரமிக்கச் செய்கிறது. உடலழகோ அதிசயத்தை ஏற்படுத்தி மனத்தில் ஆசையைத் தூண்டுகிறது.

இந்த இச்சைகளை நான் அகப்பட்டுக்கொண்டு, நிலையான பொருள் உன் பாத கமலங்களே என்பதை மறந்து திரிந்தாலும் உன்னை வழிபடாத எனக்கும் நீ அருள வேண்டும்.

நச்சைக் கலந்த உணவை உண்ட பீமன், நீர்நிலையின் அடித்தளத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கூர்மையான வாள்களின் மேல் விழும்படியாக அதில் குதிக்க இருந்தான். அவனுக்கு அங்கே அடித்தளத்தில் பொருத்தப்பட்ட வாள்களைக் காட்டியவனும், படமுடையதான ஐந்து தலைகளிலும் நிரம்பியுள்ள விஷம் தெறித்துப் போகுமாறு காளிங்கனாகிய பாம்பின் தலையில் நடனமாடியவனும், இலக்குமி உறையும் மார்பை உடையவனும், சங்கு சக்ரங்களை ஏந்திப் போர்புரிபவனுமான மாயோன் திருமாலுக்கும் இலக்குமிக்கும் மருமகனே! அசுரர்களின் தலைவனான சூரபன்மனைக் கொன்ற இளையோனே! காடு சூழ்ந்த வடவேங்கடத்தில் வீற்றிருப்பவனே, உன்னை வழிபட மறந்தவனான எனக்கும் அருள்புரிவாயாக.

மனமே காளிங்கன், ஐம்புலன்களே அந்தக் காளிங்கனுடைய ஐந்து தலைகள். இறைவன் இந்தப் பாம்பிடம் நிறைந்திருக்கும் நச்சைத் தன் பாதத்தால் நடமிட்டுத் தெறித்துப் போகச் செய்கிறான் என்று வாரியார் சுவாமிகள் அழகாக உரை காண்கிறார்.

நவராத்திரியை முன்னிட்டு, அருணகிரிநாதர் அம்பிகையை அழகழகாக விளித்துள்ள ஒரு பாடலை இன்றும், இருபத்தைந்து திருவகுப்புகளில் ஒன்றானதும், பெரிதும் அம்பிகையின் புகழ் பாடுவதுமான தேவேந்திர சங்க வகுப்பை இதற்கடுத்ததாகவும் காண்போம்.

இன்று பார்க்கப்போகும் பாடல், திருவடியைக் கூடுவதற்கானது. எந்தத் திருவடியை மறந்து உழல்வதாக நெச்சுப் பிச்சி பாடலில் சொன்னாரோ, அந்தத் திருவடியோடு கூடுவதற்கானது. இதில் வரிசையாக வந்துவிழும் அம்பிகையின் பெயர்களையும் பார்த்து, கேட்டு இன்புறலாம்.

தனன தந்தன தானா தானா

தனன தந்தன தானா தானா

தனன தந்தன தானா தானா தனதான

இரவொ டும்பக லேமா றாதே

அநுதி னந்துய ரோயா தேயே

யெரியு முந்தியி னாலே மாலே பெரிதாகி

இரைகொ ளும்படி யூடே பாடே

மிகுதி கொண்டொழி யாதே வாதே

யிடைக ளின்சில நாளே போயே வயதாகி

நரைக ளும்பெரி தாயே போயே

கிழவ னென்றொரு பேரே சார்வே

நடைக ளும்பல தாறே மாறே விழலாகி

நயன முந்தெரி யாதே போனால்

விடிவ தென்றடி யேனே தானே

நடன குஞ்சித வீடே கூடா தழிவேனோ

திருந டம்புரி தாளீ தூளீ

மகர குண்டலி மாரீ சூரி

திரிபு ரந்தழ லேவீ சார்வீ யபிராமி

சிவனி டந்தரி நீலீ சூலீ

கவுரி பஞ்சவி யாயீ மாயீ

சிவைபெ ணம்பிகை வாலா சீலா அருள்பாலா

அரவ கிங்கிணி வீரா தீரா

கிரிபு ரந்தொளிர் நாதா பாதா

அழகி ளங்குற மானார் தேனார் மணவாளா

அரிய ரன்பிர மாவோ டேமூ

வகைய ரிந்திர கோமா னீள்வா

னமரர் கந்தரு வானோ ரேனோர் பெருமாளே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.