முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 259

தாருகாசுரன் ஆனைமுகத்தவன்; யானைக்கு  அதன் துதிக்கை பனைமரத்தை ஒத்திருப்பதால் பனைக்கை என்று பெயர்.  கொக்கு என்றால் மாமரம் என்றும் பொருளுண்டு.

Updated On : 1 ஜூன், 2016 at 6:03 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:54 PM

பதச் சேதம்

சொற் பொருள்

எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை குக்குடில் மாயம் என

Advertisement

அத்தவர்: விலைமகளிர்; இக்கை: ஆபத்தான; குக்குடில்: கு குடில், சிறுமை நிறைந்த குடிலான உடல்; மாயம் என: (உயிர்) மாயமாய் மறைந்ததும்;

கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன்

அடைக்கைக்கு: அடங்குவதற்கு; தலத்தில் புக்கு: உலகத்தில் புகுந்து; இடியாமுன்: இடிபடும் (அழியும்) முன்னே;

தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொற்பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே

கொச்சை: மழலை; குறத் தத்தை: குற மகளான கிளி—வள்ளி; பொற்பெற: பொற்பு உற, அழகாக; செச்சை: வெட்சி, வெட்சி மாலை; ஒப்பித்து: (ஒப்படைத்ததை) ஏற்று;

செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய்

செருக்கி: கர்வப்பட்டு; உறுக்கி: கோபித்து; சொல்: பேசுகிற; பிரட்ட: புரட்டு; திரள்: கூட்டம்; திறல்: வல்லமை;

பனைக்கை கொக்கனை தட்டு பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா

பனைக்கை: துதிக்கை(யை உடைய தாருகாசுரன்); கொக்கன்: இழிவுக் குறிப்பு, கொக்கு போன்றவன் (அல்லது) கொக்கு=மாமரம், மாமரமாய் நின்ற சூரபத்மன் (விளக்கத்தில் காண்க); தட்டுப்பட: தடைப்படுமாறு; சற்ப: சர்ப்ப—ஆதிசேடன்; பணம்: நாகத்தின் படம்; துட்க: அஞ்ச;

பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே

பரப்பு: பேராசை; சுருக்கு: கஞ்சத்தனம்; பலிப்ப: பலிக்க; ஒப்பித்து: ஒப்படைத்து;

கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே

கனிக்கு: மாங்கனிக்காக; கன பக்ஷி: பெருமைவாய்ந்த பறவையான மயில்; இடைப்புக்கு: ஏறி அமர்ந்து; களி புக்கு: மகிழ்ச்சி அடைந்து;

கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே.

கலி: கலியுகம்; கச்சி: காஞ்சி; சொக்கப் பெருமாள்: அழகிய பெருமாள்;

எனக்குச்சற்று உனக்குச்சற்றெனக் கத்து அத்தவர்க்கு ... ‘எனக்குக் கொஞ்சம், ‘உனக்குக் கொஞ்சம்’ என்று இரைச்சலிட்டுக் கூவும் விலைமாதர்களுக்கு,

இச்சைப்பொருட் பொற்தட்டு இடு இக்கைக் குக்குடில் ... அவர்கள் விரும்புகின்ற பொருளையெல்லாம் தங்கத் தட்டில் இட்டுத் தருகின்றதும், ஆபத்து நிறைந்ததுமான இந்த உடல்,

மாயம் எனக் கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனற்சுட்டிட்டு அடக்கைக்கு ... (உயிர்) மாயமாக மறைந்ததுமே, விறகுக் கட்டைகளுக்கு இடையே வைக்கப்பட்டும், தீயால் எரிக்கப்பட்டும் அழிந்துபோவதற்கும்;

பிறக்கைக்குத் தலத்திற்புக்கு இடியாமுன் ... (அப்படி அழிந்த பிறகு, அந்த உயிரானது மீண்டும்) இந்த உலகத்தில் புகுந்து பிறப்பதற்கும் (மீண்டும்) அழிவதற்கு முன்னாலே (இதற்கு அடுத்து ‘தினைக்குட்’ தொடங்கி ‘அணிவோனே’ வரையில் முருகனை விளிப்பது; இங்கே நிற்கும் வாக்கியத்தைச் ‘செருக்கிச் சற்று’ என்று தொடங்கும் அடியோடு கொண்டுகூட்டிக் கொள்ள வேண்டும்.)

தினைக்குட் சித்திரக் கொச்சைக் குறத் தத்தைத் தனத்தை ... தினைபுனத்திலே, குழறிக் குழறி மழலை மொழிபேசும் குறக்குலத்துக் கிளியான வள்ளியின் மார்பை,

பொற்பெறச்செச்சைப் புயத்து ஒப்பித்து அணிவோனே ... அழகுவிளங்கும் வெட்சி மாலையை அணிந்த உன் தோள்களில் ஏற்று அணிந்து கொள்பவனே! (மார்புறத் தழுவுபவனே!)

செருக்கிச்சற்று உறுக்கிச்சொற்... (இதற்கு முன்னே இருக்கும் ‘பிறக்கைக்கு’ என்ற அடியை இங்கே கூட்டிக் கொள்கிறோம்) கர்வத்துடனும் கோபத்துடனும் பேசுபவர்களும்;

பிரட்டத் துட்டரைத்தப்பித் திரள் தப்பி ... புரட்டர்களும்; துஷ்டர்களுமான அந்தக் கூட்டத்திலிருந்து தப்பித்து விலகி,

கழற்செப்பத் திறல்தாராய் ... உன் திருவடியைப் புகழ்ந்து பாடும் வல்லமையைத் தந்தருள வேண்டும்.

பனைக்கைக் கொக்கனை ... பனைமரத்தை ஒத்த துதிக்கையை உடையவனும்; கொக்கைப் போல காத்திருந்து* தாக்குபவனுமான தாருகாசுரனை (அல்லது பனைக்கை, கொக்கன் என்று பிரித்து, தாருகாசுரன், சூரபத்மன் எனக்கொள்ள முடியும்)

(தாருகாசுரன் ஆனைமுகத்தவன்; யானைக்கு  அதன் துதிக்கை பனைமரத்தை ஒத்திருப்பதால் பனைக்கை என்று பெயர்.  கொக்கு என்றால் மாமரம் என்றும் பொருளுண்டு.  மாமரமாக நின்றவன் சூரபத்மன்.  எனவே, ஆனைமுகத்தை உடைய கொக்கனான தாருகாசுரன் என்றும்; தாருகாசுரனையும் சூரபத்மனையும் என்றும் இரண்டுவிதமாகவும் பொருள் கொள்ளலாம்.)

(ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு என்ற மூதுரை; கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்ற குறள் போன்றவை குறிக்கும் காத்திருந்து சமயம் பார்த்துத் தாக்கும் குணத்தைக் கொண்ட தாருகாசுரன் என்று விரிக்கவும் இடமிருக்கிறது.)

தட்டுப்படக் குத்திப்பட ... தடைபட்டு அழியும்படியாக வேலாலே குத்தி அவன் இறக்கும்படியும்;

சற்பப் பணத் துட்கக் கடலது உட்கப் பொரும்வேலா ... ஆதிசேடனின்—படங்களையுடைய ஆயிரம் முடிகளும் நடுங்கும்படியும்; கடல் கலங்கும்படியும் போரிட்ட வேலவனே!

பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்று ... பேராசை ஒழிந்து; கஞ்சத்தனம் ஒழிந்து; அஞ்சிப் பதைப்புறும் தன்மை ஒழிந்து; திகைத்துக் கலங்குவது ஒழிந்து;

பலிப்பப் பத்தருக்கு ஒப்பித்தருள்வாழ்வே ... இப்படிப்பட்ட தன்மைகளெல்லாம் பக்தர்களுக்குப் பலிக்கச் செய்து அருள்பாலிக்கும் செல்வமே!

கனிக்குத் திக்கனைத்துச் சுற்றிட ... மாங்கனிக்காக எல்லாத் திசைகளிலும் சுற்றியதும்;

பச்சைக் கனப்பக்ஷிக்கு இடைப்புக்குக் களிப்புக்குத் திரிவோனே ... பச்சை வண்ணமுள்ளதும்; பெருமை நிறைந்த பட்சியுமான மயிலின்மேலே ஏறியமர்ந்து மகிழ்ச்சியோடு உலா வருபவனே!

கலிக்கு ஒப்பிற் சலிப்பற்றுக் கதிக்கு ஒத்திட்டு ... இந்தக் கலியிலே ஒப்பில்லாத தெய்வமாக விளங்கி, சற்றும் சலிக்காமல் அடியார்களுக்கு மோட்சகதியை அளிக்க உடன்பட்டவனே!

எழிற்சத்திக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே. ... அழகு நிறைந்த சக்தி, அம்மை காமாட்சி எழுந்தருளியுளளதும் எப்போதும் கடல்போல ஒலிக்கும் ஓசை நிறைந்ததுமான காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே!

சுருக்க உரை

பனைமரம்போலத் துதிக்கையை உடைய தாருகாசுரனையும், மாமர வடிவத்தில் நின்ற சூரபத்மனையும் அவர்களுடைய செயல்கள் தடைப்படுமாறு குத்தி அவர்களை அழித்தும்; ஆதிசேடனுடைய ஆயிரம் படங்கொண்ட தலைகளும் கடலும் அஞ்சும்படியாகப் போரிட்ட வேலவனே!  மாங்கனிக்காக எல்லா திசைகளிலும் சுற்றி வலம்வந்ததும்; பச்சை நிறமுள்ளதும்; பெருமை வாய்ந்ததுமான மயிலாகிய பட்சியின்மேல் ஏறிக்கொண்டு மகிழ்ச்சியோடு உலா வருபவனே!  இந்தக் கலியுகத்திலே நிகரில்லாத தெய்வமாகவும்; பக்தர்களுக்கு மோட்ச கதியை அளிக்க உடன்பட்டு அதில் சலிப்பில்லாதவனாகவும் நிற்பவனே!  அழகிய சக்தியான காமாட்சியம்மை வீற்றிருப்பதும்; எப்போதும் கடல் ஒலிப்பதுபோன்ற இரைச்சல் நிறைந்ததுமான காஞ்சிமா நகரத்தில் விளங்குகின்ற அழகிய பெருமாளே!

குழறிக் குழறிப் பேசுகின்ற குறக்குலத்துக் கிளியான வள்ளியம்மை இருக்கும் தினைப்புனத்திலே, அம்மையின் மார்பை, வெட்சிமாலையணிந்த உன் தோள்களிலே பொருந்தும்படித் தழுவிக் கொள்பவனே!

‘எனக்குக் கொஞ்சம், உனக்குக் கொஞ்சம்’ என்று கூக்குரலெழுப்புகின்ற விலைமாதர்களுக்கு அவர்கள் வேண்டியதையெல்லாம் தங்கத் தட்டிலே வைத்துத் தரக்கூடியதும்; ஆபத்து நிறைந்ததுமான இந்தச் சிறுமை நிறைந்த உடலானது, உயிர் மாயமாய் மறைந்ததும் விறகுக் கட்டைகளுக்கு இடையில் இடப்பட்டுத் தீயால் சுடப்பட்டு அழியவும்; போன உயிரானது மீண்டும் பூமியில் பிறந்து மீண்டும் மரணமடைந்து இந்தச் சுழற்சியில் அகப்பட்டுக் கொள்ளாமலும்; அகந்தையும் கோபமும்கொண்டு பேசுகின்ற துஷ்டர்கள்; புரட்டர்களான துஷ்டர்கள் ஆகிய இவர்களின் கூட்டங்களிலிருந்து தப்பித்து விலகி, உன்னுடைய திருவடிகளையே எப்போதும் ஓதும் வல்லமையைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.