முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 261

அந்தோ மனமே நமது ஆக்கையை நம்பாதெ இதம் அகிதம் சூத்திரம் அம்போருகன் ஆடிய பூட்டு இது இனி மேல் நாம்

Updated On : 1 ஜூன், 2016 at 8:46 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:55 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அந்தோ மனமே நமது ஆக்கையை நம்பாதெ இதம் அகிதம் சூத்திரம் அம்போருகன் ஆடிய பூட்டு இது இனி மேல் நாம்

Advertisement

ஆக்கை: யாக்கை, உடல்; நம்பாதெ: நம்பாதே—குறுக்கல் விகாரம்; இதம்: இன்பம்; அகிதம்: துன்பம்; சூத்திரம்: பொறி, யந்திரம்; அம்போருகன்: பிரமன்; ஆடிய: செய்த; பூட்டு: கோத்துச் செய்த கருவி;

அஞ்சாது அமையா கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு இயல் அங்கு ஆகுவம் வா இனிது யாக்கையை ஒழியாமல்

அஞ்சாது அமையா: அச்சமின்றி இருக்க முடியாது; பஞ்சாடிய: பஞ்சாகப் பறக்கச் செய்த; இயல் ஆகுவம்: அன்புரிமை உள்ளவர்களாக ஆகுவோம்; யாக்கையை ஒழியாமல்: உடலை வீணே அழித்துவிடாமல்;

வந்தோம் இதுவே கதி ஆட்சியும் இந்தா மயில் வாகனர் சீட்டு இது வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவ நீறும்

வந்தோம்: அவனுக்கு அடிமைப்பட வந்தோம்; ஆட்சி: வழக்கத்தில் உள்ளது, நடைமுறை; வீக்கிய: கட்டிய, கட்டித் தந்த; வீக்குதல்: இறுகக் கட்டுதல்; சிவநீறு: திருநீறு;

வந்தே வெகுவா நமை ஆட் கொளு வந்தார் மதம் ஏது இனி மேற்கொள மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே

வெகுவாய்: மிகுதியாக; மதம் ஏது இனி: பின்பற்றுவதற்கான சமயங்கள் ஏது இனிமேல்; ஆர்ப்பு: ஒலி, ஓசை, முழக்கம்; உய: உய்ய;

திந்தோதிமி தீதத மாத்துடி தந்தாதன னாதன தாத்தன செம் பூரிகை பேரிகை ஆர்த்து எழ மறை ஓத

மா துடி: பெரிய உடுக்கை; பூரிகை: ஊதுகுழல்; பேரிகை: முரசம்;

செம் காடு எனவே வரும் மூர்க்கரை சங்கார சிகாமணி வேல் கொடு செண்டு ஆடி மகா மயில் மேல் கொளு முருகோனே

செம்காடு எனவே வரு மூர்க்கர்: போரில் காயம்பட்டதாலே உடலெங்கும் குருதிக் காடாக வரும் அரக்கர்; சிகாமணி: முதன்மை பெற்ற; செண்டு ஆடி: நிலைகுலையச் செய்து;

இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய என் தாதை சதா சிவ கோத்திரன் அருள் பாலா

இந்து: சந்திரன்; இதழ்: கொன்றைப் பூ; நாகம்: பாம்பு; மகாகடல்: கடலைப் போன்ற கங்கை; கங்காளம்: எலும்புக்கூடு; மின் ஆர்: ஒளி பொருந்திய; தாதை: தந்தை; கோத்திரன்: வர்க்கத்தவன்;

எண் கூடு அருளால் நௌவி நோக்கியை நல் பூ மணம் மேவி சிராப்ப(ள்)ளி என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே.

எண் கூடு அருள்: எண்ணிக்கை கூடிய அருள், மிகுதியான அருள்; நௌவி, நவ்வி: மான்; மன மேதினி: மனமாகிய பூமியில்; மேதினி: பூமி;

அந்தோ மனமே நம தாக்கையை நம்பாதெ ... மனமே, அந்தோ!  நிலையற்ற இந்த உடலை நிலையானது என்றெண்ணிவிடாதே; இது,

இதாகித சூத்திரம் ... இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து செய்த யந்திரம்;

அம்போருகன் ஆடிய பூட்டிது ... இந்த யந்திரத்தைப் பூட்டியவன் பிரமன்;

இனிமேல்நாம் அஞ்சாதமையா ... (இதுவரை ஆனது இருக்கட்டும்.)  இதற்குமேல் நாம் ‘இந்த உடல் அழியக்கூடியதே’ என்று அச்சப்படாமல் இருக்க முடியாது;

கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு ... கிரெளஞ்ச மலையின் உடலைத் தூளடித்துப் பஞ்சாகப் பறக்கச் செய்த வேலவனுக்கு—

இயல் அங்கு ஆகுவம் வா ... ஒழியாத அன்பை உடையவர்களாக ஆகுவோம் வா.

இனிது ஆக்கையை ஒழியாமல் வந்தோம் ... எதையெதையோ ‘இனிது’ என்று கருதி இந்த உடலை வீணாக அழித்துவிடாமல் அவனிடத்தில் வந்திருக்கிறோம்;

இதுவேகதி ஆட்சியும்... இதுதான் நமக்கு நற்கதி; இதுதான் நடைமுறை—ஆன்றோர் சொன்னவகை;

இந்தா மயில் வாகனர் சீட்டிது ... மயில் வாகனன் நமக்குக் கொடுத்துள்ள உறுதிச் சீட்டு இதோ இருக்கிறது, இந்தா.. எடுத்துக் கொள்.

வந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும் ... ‘நாம் வந்து உம்மை ஆட்கொள்வோம்’ என்று அவன் கட்டிக் கொடுத்த திருநீறும் இதோ இருக்கிறது.

வந்தேவெகுவா நமையாட்கொள் உவந்தார் ... நம்மை வந்து ஆட்கொள்ள அவன் வெகுவாக உவந்திருக்கிறான்.

மதமேது இனி மேற்கொள ... இதைக்காட்டிலும் கடைப்பிடிக்க வேறு நெறியென்று எது இருக்கிறது?

மைந்தா குமராவெனும் ஆர்ப்பு உய மறவாதே ... பாலனே, குமாரனே என்ற பேரோசையோடு துதிப்பதை மறக்காதே.  நீ உய்ய இது தேவை.

திந்தோதிமி தீதத மாத்துடி ... பெரிய உடுக்கை திந்தோதிமி தீதத என்றும்,

தந்தாதன னாதன தாத்தன ... தந்தாதன னாதன தாத்தன என்றும் ஒலி எழுப்ப;

செம்பூரிகை பேரிகை யார்த்தெழ மறையோத ... சிறந்த ஊதுகுழலும், முரசும் ஒலியெழுப்ப, வேதகோஷம் எழும்ப;

செங்காடெனவே வரு மூர்க்கரை ... போரில் பெருகிய ரத்தத்தால் சிவந்த காட்டைப் போல வருகின்ற அரக்கர்களை,

சங்கார சிகாமணி வேற்கொடு ... சம்ஹரிப்பதில் முதன்மை பெற்ற வேலைக் கொண்டு,

செண்டாடி மகாமயில் மேற்கொளு முருகோனே ... அவர்களை நிலைகுலையச் செய்து, பெரிய மயில் வாகனத்தில் ஏறி அமர்கின்ற முருகனே!

இந்தோடிதழ் நாக மகாக்கடல் ... பிறைச் சந்திரனையும், கொன்றை மலரையும், நாகத்தையும், பெருங்கடலைப் போன்ற கங்கையையும்,

கங்காள மினார்சடை சூட்டிய ... எலும்புக் கூட்டையும் ஒளி நிறைந்த சடையில் சூட்டிக்கொண்டுள்ள,

என்தாதை சதாசிவ கோத்திரன் அருள்பாலா ... என் தந்தையும்; சதாசிவ வர்க்கத்துக்குத் தலைவனுமான சிவபெருமான் அருளிய குமாரனே!

எண்கூடருளால் நெளவி நோக்கியை ... மான்போன்ற விழியை உடைய வள்ளியை அளவற்ற திருவருளால்,

நன்பூமண மேவி ... நலம் நிறைந்த எழிலோடு திருமணம் செய்துகொண்டவனும்;

சிராப்பளி யென்பார் ... திருசிராப்பள்ளி என்று இந்தத் திருத்தலத்தின் பெயரை மட்டும் உச்சரித்தாலே அவர்களுடைய,

மனமேதினி நோக்கிய பெருமாளே. ... மனம் என்ற பூமியில் எழுந்தருள்பவனுமான பெருமாளே!

சுருக்க உரை

திந்தோதிமி தீதத என்று பெரிய உடுக்கையும்; தந்தாதன னாதன தாத்தன என்று ஊதுகுழலும் முரசும் பேரொலியை எழுப்ப, வேதங்கள் முழங்க; போரில் ரத்தம் பெருகுவதால் சிவந்த காடுகளைப் போல வரும் அரக்கர்களைக் சம்ஹரித்தவனே! முதன்மை வாய்ந்த வேலாயுதத்தால் அவர்களை நிலைகுலையச் செய்தவனே! பெருமை மிக்க மயில்மீது ஏறிவரும் முருகவேளே!  பிறைச்சந்திரன், கொன்றைப் பூ, பாம்பு, கடலை ஒத்த கங்கை, எலும்புக்கூடு ஆகிய எல்லாவற்றையும் தன் ஒளிமிக்க சடாமுடியில் தரித்தவனும்; என் தந்தையும்; சதாசிவ வர்க்கத்தின் தலைவனுமான சிவபிரான் அருளிய குமாரனே!  மான்போன்ற விழியாளான வள்ளியை அளவற்ற திருவருளால் விரும்பி மணந்துகொண்டவனும், திரிசிராப்பள்ளி என்ற பெயரை (மட்டுமேகூட) உச்சரிப்பவர்களுடைய மனமாகிய தலத்தில் வீற்றிருப்பவனுமான பெருமாளே! (இவனிருக்க),

ஐயோ மனமே நிலையற்ற இந்த உடலை நிலையானது என்று நம்பிவிடாதே.  இது இன்பங்களாலும் துன்பங்களாலும் கோத்து பிரமன் பூட்டிய யந்திரம்.  இது அழியும் என்று அஞ்சாமல் இருக்க இனியும் முடியாது.  கிரெளஞ்ச மலையைத் தூளடித்துப் பஞ்சாகப் பறக்கச் செய்த வேலவனுக்கு ஒழியாத அன்பை உடையவர்களாக ஆகலாம் வா.  எதையெதையோ இனிது என்று எண்ணி இந்த உடலை வீணே அழித்துவிடாமல் வேலவனுக்கு அன்படிமைகளாக ஆகலாம் வா.  வந்தோமோ?  இதுதான் நமக்கு நற்கதி.  ஆண்டவன் நம்மை ஆண்டுகொள்வதற்கு உரிய வழி.  இதோபார்.  அவன் நமக்குத் தந்துள்ள உறுதிச் சீட்டும், கட்டி அனுப்பிய திருநீற்றுப் பொட்டலமும் உள்ளன.  எனவே அவன் நம்மை வந்து ஆண்டுகொள்ள வெகுவாக உவந்திருக்கிறான் என்பது நிச்சயம்.  இதற்குமேல் நாம் பின்பற்ற நெறிமுறைகளென்று ஏதும் இருக்கின்றதா என்ன!  ஆகவே மனமே, நீ உய்யவேண்டும் ஆகையாலே, ‘மைந்தா, குமரா’ என்று ஓதுவதை ஒருபோதும் மறவாதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.