பகுதி - 262
சர்ப்பகோத்திரம் என்றும் நாகமலை என்றும் அறியப்படும் திருச்செங்கோட்டுத் தலத்துக்கான திருப்புகழ் இது. இதைத் தவறாமல் ஓதுபவர்களுக்கு வாக்கு வன்மை சித்திக்கும் என்பது உறுதி.
சர்ப்பகோத்திரம் என்றும் நாகமலை என்றும் அறியப்படும் திருச்செங்கோட்டுத் தலத்துக்கான திருப்புகழ் இது. இதைத் தவறாமல் ஓதுபவர்களுக்கு வாக்கு வன்மை சித்திக்கும் என்பது உறுதி. மிகச்சிறிய வயதுமுதல் அடியேன் அன்றாடம் தவறாமல் ஓதிவரும் திருப்புகழ்ப் பாக்களிலே முதலாவது இது. வாக்கு வன்மையும் வேண்டும்; உன் திருவருட் பிரசாதமாக உன்னுடைய வெட்சிமாலையையும் தரவேண்டும் என்று கோரும் பாடல் இது. முற்றிலும் வல்லொற்றுகளால் அமைந்த பாடல்; ஒவ்வொரு நான்காவது எழுத்தும் (ஒற்று நீக்காமல்) நெடில். சொல்வதற்கு எளிய, இனிய சந்தம்.

தத்த தாத்தத் தத்த தாத்தத்

தத்த தாத்தத் தனதான

அத்த வேட்கைப் பற்றி நோக்கத்

தத்தை மார்க்குத் தமராயன்

பற்ற கூட்டத் திற்ப ராக்குற்

றச்சு தோட்பற் றியவோடும்

சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்

சிக்கை நீக்கித் திணிதாய

சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்

செச்சை சாத்தப் பெறுவேனோ

கொத்து நூற்றுப் பத்து நாட்டக்

கொற்ற வேத்துக் கரசாய

குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்

பொற்ப வேற்கைக் குமரேசா

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்

தெட்டு மேற்றுத் திடமேவும்

தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்

சத்ய வாக்யப் பெருமாளே.