முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 257

தேர்ந்தெடுத்த, சிக்கனமான, தேன்போன்ற சொற்களையும் கருத்தையும் தேடி; உறுதி நிறைந்த வாக்காலே,

Updated On : 25 மே, 2016 at 1:19 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:53 PM

பதச் சேதம்

சொற் பொருள்

செட்டாக தேனை போல சீரை தேடி திட்பம் அதாக

Advertisement

செட்டாக: சிக்கனமாக, தேர்ந்தெடுத்து; திட்பம்: சீர்: சிறப்பு; உறுதி;

திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்கு சில பாடல்

திக்காமல்: திக்கித் திணறாமல்; பாடுற்றார்: பாட உற்ற புலவர்கள்; சீர்: செல்வம்;

பெட்டாக கூறி போதித்தாரை போல் வப்புற்று உழலாதே

பெட்டாக: மயக்கும் வண்ணமாக, பொய்யாக; போதத்தார்: ஞானியர்; வப்பு: வம்பு—வலித்தல் விகாரம்; வம்பு (இந்த இடத்தில்) வீணாக;

பெற்றாரில் சார் உற்றாய் நல் தாள் சற்று ஓத பெற்றிடுவேனோ

பெற்றாரில்: பெற்றவர்களைப் போல; சார்வுற்றாய்: சார்பு உற்றாய், அன்பு கொண்டாய்;

எட்டா(து) நெட்டாக தோகைக்கே புக்கு ஒலத்திட்டு இமையோர்

எட்டாது: பாய்ந்து; நெட்டாக: நெட்டுக்குத்தாக, பெருமையுடன்; ஓலத்து இட்டு: கதறி, கூவி;

வானில் பாரில் சூழச் சூரை தான் எட்டா வெட்டி பொரும் வேலா

எட்டா: எட்டி, அணுகி;

முட்டாமல் தாளை சேவிப்பார் முன் பாவத்தை களைவோனே

முட்டாமல்: முட்டுப்பாடின்றி, தடையின்றி;

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே.

முத்தீ: ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி என்று மூன்று வகையான அக்கினி; அத்தா: தலைவா;

செட்டாகத் தேனைப் போலச் சீரைத் தேடித் திட்பம் அதாக ... தேர்ந்தெடுத்த, சிக்கனமான, தேன்போன்ற சொற்களையும் கருத்தையும் தேடி; உறுதி நிறைந்த வாக்காலே,

திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்குச் சில பாடல் ... திக்கித் திணறாமல் சரளமாகப் பாட வல்லவர்களைப் போல நானும் செல்வந்தர்களிடம் சென்று, சில பாடல்களை,

பெட்டாகக் கூறிப் போதத்தாரைப் போல் வப்புற்று உழலாதே ... மயக்கக்கூடிய பொய்யான மொழியால் பாடியும்; ஞானியரைப் போல பாவித்துக்கொண்டும் காலத்தை வீணாக்கியபடித் திரியாமல்;

பெற்றாரில் சார்வுற்றாய் நல் தாள் சற்று ஓதப் பெற்றிடுவேனோ ... பெற்றோரைப் போல என்னிடத்திலே அன்புகாட்டித் துணை நிற்பவனே, உன்னுடைய திருவடியைச் சிறிதேனும் ஓதித் துதிக்கும் பாக்கியத்தை அடைவேனோ?

எட்டா(து) நெட்டாகத் தோகைக்கே புக்கு... பெருமை நிறைந்த மயிலின்மேல் தாவிப் பாய்ந்தேறி,

ஓலத்திட்டு இமையோர் வானில் பாரில் சூழச் சூரைத் தான் எட்டா வெட்டிப் பொரும் வேலா ... தேவர்கள் வானத்திலும் பூமியிலும் கதறியபடி உன்னைச் சூழ்ந்து நிற்க; சூரனை அடைந்து, அவனை வெட்டிவீழ்த்திப் போரிடும் வேலா! (சூரனை எட்டாக—எட்டு துண்டுகளாக—வெட்டிப் போரிடும் என்று சொன்னாலும் பொருந்தும்)

முட்டாமல் தாளைச் சேவிப்பார் முன் பாவத்தைக் களைவோனே ... வழிபடுவதில் சற்றும் முட்டுப்பாடின்றி—நிறுத்தாமல்—உன் திருவடிகளை வணங்குபவர்களுடைய முந்தைய பாவங்களை நீக்குபவனே!  (முருகனை வணங்கிய பின்னர் பாவம் அணுகாததால், முற்பாவங்களைக் களைவோன் என்றார்.)

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ... முத்தைப்போல அருமை வாய்ந்தவனே!  மூன்று வகை அக்கினியாலும் செய்யப்படும் வேள்விக்குத் தலைவனே!  பரிசுத்தனே!  முக்தனே—பற்றற்றவனே! முக்தியைத் தரும் பெருமாளே!

சுருக்க உரை

தேவர்கள் ‘அபயம் அபயம்’ என்று கதறியபடி வானத்திலும் பூமியிலும் உன்னைச் சூழ்ந்துகொள்ள, பெருமைவாய்ந்த மயிலின் மேல் தாவிப் பாய்ந்தேறி, சூரனை எட்டுத் துண்டுகளாக வெட்டிவீழ்த்திப் போரிடுபவனே!  இடைவிடாமல், தடைப்படாமல் உன்னுடைய திருப்பாதங்களை வழிபடுபவர்களுடைய முந்தைய பாவங்களைக் களைபவனே!  முத்துப்போல அருமைவாய்ந்தவனே!  மூன்று வகையான தீயைக் கொண்டு செய்யப்படும் வேள்விகளின் தலைவனே!  பரிசுத்த மூர்த்தியே!  பற்றற்றவனே!  முக்தியைத் தரும் பெருமாளே!

சிக்கனமானதும், தேர்ந்தெடுத்ததும், தேன்போன்றதுமான சொற்களால் கட்டப்பட்ட சில பாடல்களை, சரளமாகவும் தங்குதடையின்றியும் பாடும் புலவர்களைப் போல நானும் பொருள் படைத்தவர்களை அணுகி, அவர்களை மயக்கவல்ல பொய்யான மொழிகளால் அவர்களைப் பாடியும்; ஞானியரைப் போல பாவனை காட்டிக்கொண்டும் வீணே காலத்தைக் கழிக்காமல், என்னைப் பெற்றவர்களைப் போல என்னிடத்திலே அன்புகாட்டித் துணைநிற்கும் உன்னுடைய நல்ல திருவடிகளை ஓதிப் போற்றும் பாக்கியத்தை அடைவேனோ?  (அந்த பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.