முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 366

திருச்செங்கட்டாங்குடி என்ற தலத்துக்கான பாடல்

Updated On : 3 அக்டோபர், 2016 at 6:21 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:53 PM


நன்னிலம் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள திருச்செங்கட்டாங்குடி என்ற தலத்துக்கான பாடல் இது.  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருடைய பாடல்பெற்ற தலம்.  சிறுத்தொண்ட நாயனாருடைய தலம்.  இப்பாடல் இறைவனிடமிருந்து உபதேசத்தைப் பெறுவதைக் கோருகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 49 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் 2, 4, 8, 12 ஆகிய எழுத்துகள் நெடில், மற்றவை குறில்.  

தந்தான தானதன தானதன தானதன
      தந்தான தானதன தானதன தானதன
      தந்தான தானதன தானதன தானதன - தனதான

Advertisement

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
         கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
         வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் - மலர்போல
      மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
         கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
         வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய - லிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
         சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
         சண்டாளர் சீசியவர் மாயவலை யீட்டியெ - னுழலாமற்
      சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
         வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
         தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் - புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
         கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
        சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென - விருதோதை
      சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
         கங்காள வேணிகுரு வானவந மோநமென
         திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
         பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
         யின்பான தேனிரச மார்முலைவி டாதகர - மணிமார்பா
      எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
         செங்கோடு மேவிபிர காசமயில் மேலழகொ
         டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர்  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.