பகுதி - 360
இறைவனை ஞானோபதேசம் செய்வித்து அருளும்படிக்
பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இது, இறைவனை ஞானோபதேசம் செய்வித்து அருளும்படிக் கேட்டுக்கொள்கிறது.
பாடலின் அமைப்பு பெரும்பாலும் நெடிலோசையால் அமைந்துள்ளது. அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகள்; 1, 4, 6, 8, 11, 13, 15, 18, 20 ஆகிய எழுத்துகள் (தொங்கல் சீர் இல்லாமல்) நெடில்; மற்ற எழுத்துகள் குறில்; ஒற்று சேர்த்து 7, 15, 23 ஆகிய எழுத்துகள் வல்லொற்று. பாடலைப் பார்ப்போம்.
தானன தானதாத்த தானன தானதாத்த
தானன தானதாத்த தனதான
பாதக மானயாக்கை வாதுசெய் பாவிகோத்த
பாணமும் வாளுமேற்ற இருபார்வை
பாரப டீரமாப்ப யோதர மாதர்வாய்த்த
Advertisement
பாயலின் மீதணாப்பி யிதமாடுந்
தோதக மாயவார்த்தை போதக மாகநோக்கு
தூய்மையில் நாயினேற்கும் வினைதீரச்
சூழுமு னாதிநீத்த யானொடு தானிலாச்சு
கோதய ஞானவார்த்தை யருள்வாயே
சாதன வேதநூற்பு ராதன பூணநூற்ப்ர
ஜாபதி யாண்மைதோற்க வரைசாடிச்
சாகர சூரவேட்டை யாடிய வீரவேற்ப்ர
தாபம கீபபோற்றி யெனநேமி
மாதவன் மாதுபூத்த பாகர னேகநாட்ட
வாசவ னோதிமீட்க மறைநீப
மாமலர் தூவிவாழ்த்த யானையை மாலைசூட்டி
வானவர் சேனைகாத்த பெருமாளே.