முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 362

இந்தத் திருப்புகழ் திருத்தணித் தலத்துக்கானது.

Updated On : 13 செப்டம்பர், 2016 at 5:51 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:43 PM

இறைவன் திருவடியில் மனமுருகி நிற்பதற்கான இந்தத் திருப்புகழ் திருத்தணித் தலத்துக்கானது.  ஓசைச் சிறப்பு மிக்கது; சற்றே நீண்ட சந்த அமைப்பை உடையது.  அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகள்; தொங்கல் சீரில் மட்டும் நெடில் பயில்கிறது; மற்ற அத்தனை எழுத்துகளும் குற்றெழுத்துகள்.  ஒற்றைச் சேர்த்து ஒவ்வொரு மடக்கிலும் மூன்றாம் எழுத்தும் ஆறாம் எழுத்தும் வல்லொற்று.  மெல்லொற்று இல்லாத பாடல். 

தனத்த தத்தன தனதன தனதன

      தனத்த தத்தன தனதன தனதன

Advertisement

      தனத்த தத்தன தனதன தனதன           தனதான

சினத்தி லத்தினை சிறுமண லளவுடர்

         செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்

         செனித்த தெத்தனை திரள்கய லெனபல வதுபோதா

      செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை

         செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு

         செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ   தளவேதோ

மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி

         கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்

         வதைத்த தெத்தனை யளவிலை விதிகர      மொழியாமல்

      வகுத்த தெத்தனை மசகனை முருடனை

         மடைக்கு லத்தனை மதியழி விரகனை

         மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள்   புரிவாயே

தனத்த னத்தன தனதன தனதன

         திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி

         தகுத்த குத்தகு தகுதகு தகுதகு         தகுதீதோ

      தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி

         தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு

         தமித்த மத்தள தமருக விருதொலி     கடல்போலச்

சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய

         திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை

         தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை    பொரும்வேலா

      செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ

         முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி

            திருத்த ணிப்பதி மருவிய குறமகள்  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.