பகுதி - 624
இந்தப் பாடல் திருவொற்றியூருக்கானது
‘சிவகதியைப் பெறவேண்டும்’ என்று கோருகிற இந்தப் பாடல் திருவொற்றியூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் நான்காவது எழுத்தாக வரும் கணக்கில் சேராத வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கு எழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதத்தன தானதன தனதத்தன தானதன
தனதத்தன தானதன தனதானா
Advertisement
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச சுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவக்ரம மாதர்வயி றிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகை யதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை யொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி மருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர் குலகாலா
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ னருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு பெருமாளே.