முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 716

உனது திருவடியைத் தந்தருளவேண்டும்

Updated On : 15 டிசம்பர், 2017 at 10:30 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:51 PM

‘உனது திருவடியைத் தந்தருளவேண்டும்’ என்று கோருகிற இப் பாடல் திருச்சிராப்பள்ளிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  பெரிதும் வல்லொற்றுகளால் அமைந்திருப்பது. ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் இரண்டு குறிலையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் இரண்டு நெடில் எழுத்துகளையும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் மூன்று குறில், ஒரு நெடில் என நான்கு எழுத்துகளையும் கொண்டு அமைந்துள்ளன.


தத்த தானா தனாதன தத்த தானா தனாதன
      தத்த தானா தனாதன               தந்ததான

Advertisement

சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
         தத்வ வாதீ நமோநம             விந்துநாத

சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
         தற்ப்ர தாபா நமோநம            என்றுபாடும்

பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
         பச்சை பாடீ ரபூஷித              கொங்கைமேல்வீழ்

பட்டி மாடான நானுனை விட்டி ராமே யுலோகித
         பத்ம சீர்பா தநீயினி              வந்துதாராய்

அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
         யர்க்ய சோமா சியாகுரு          சம்ப்ரதாயா

அர்ச்ச னாவா கனாவய லிக்குள் வாழ்நா யகாபுய
         அக்ஷ மாலா தராகுற             மங்கைகோவே

சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல
         திக்கு பாலா சிவாகம             தந்த்ரபோதா

சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
         தெர்ப்பை யாசா ரவேதியர்        தம்பிரானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.