முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 610

உண்மை ஒளியை

Updated On : 17 ஜூலை, 2017 at 7:45 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:56 PM

‘மௌன நிறைவு கொண்டதான உண்மை ஒளியை உபதேசித்து அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் காஞ்சி தலத்துக்கானது.

ஒவ்வொரு சீரிலும் வேறுபட்ட ஓசையமைப்பு உடைய இந்தப் பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 21 எழுத்துகள் உள்ளன.  முதற் சீர் மூன்று குற்றெழுத்துகளையும்; இரண்டாம் சீர் நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளையும்; மூன்றாம் சீர் மூன்று குற்றெழுத்துகளையும் கணக்கில் சேராத ஒரு வல்லொற்றையும்; நான்காம் சீர் நான்கு குற்றெழுத்துகளையும்; ஐந்தாம் சீர் இரண்டு நெடிலையும்; ஆறாம் சீர் குறில்-வல்லொற்று-குறில்-வல்லொற்றையும் கொண்டு அமைந்திருக்கின்றன.

தனன தானன தத்தன தனதன
                 தானா தத்தத்  தனதான

Advertisement

கரும மானபி றப்பற வொருகதி
                 காணா தெய்த்துத் தடுமாறுங்

கலக காரண துற்குண சமயிகள்
                 நானா வர்க்கக் கலைநூலின்

வரும நேகவி கற்பவி பரிதம
                னோபா வத்துக் கரிதாய

மவுன பூரித சத்திய வடிவினை
                மாயா மற்குப் புகல்வாயே

தரும வீம அருச்சுன நகுலச
               காதே வர்க்குப் புகலாகிச்

சமர பூமியில் விக்ரம வளைகொடு
                நாளோர் பத்தெட் டினிலாளுங்

குரும கீதலமுட்பட வுளமது
                கோடா மற்க்ஷத் ரியர்மாளக்

குலவு தேர்கட வச்சுதன் மருககு
                 மாரா கச்சிப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.