பகுதி - 616
நற்கதியைக் கோரும்
நற்கதியைக் கோரும் இப்பாடல் பழனிக்கானது. அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒவ்வொரு அடி, மடக்கடியிலும் பயிலும் மூன்று சீர்களிலும் சமமாக ஐந்து ஐந்து எழுத்துகள் அமைந்துள்ளன. இந்த ஐந்தெழுத்துகளும் குறிலெழுத்துகள்; ஒவ்வொரு சீரும் ஒரு வல்லொற்றோடு முடிவடைகிறது.
தனதனதத் தனதனதத்
தனதனதத் தனதான
திடமிலிசற் குணமிலிநற்
றிறமிலியற் புதமான
Advertisement
செயலிலிமெய்த் தவமிலிநற்
செபமிலிசொர்க் கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற்
கியல்பிலிநற் றழிழ்பாட
இருபதமுற் றிருவினையற்
றியல்கதியைப் பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக்
கிளைமடியப் பொரும்வேலா
கிரணகுறைப் பிறையறுகக்
கிதழ்மலர்கொக் கிறகோடே
படர்சடையிற் புனைநடனப்
பரமர்தமக் கொருபாலா
பலவயலிற் றரளநிறைப்
பழநிமலைப் பெருமாளே.