பகுதி - 617
பக்தியில் உறுதி இல்லாதவனும்
பதச் சேதம் | சொற் பொருள் |
திடம் இலி சற் குணம்இலி நல் திறம் Advertisement
| திடமிலி: (கொண்ட பக்தியில்) உறுதியற்றவன்; |
செயல் இலி மெய் தவம்இலி நல் செபம்
| சொர்க்கமும் மீதே: சொர்க்கத்திலும்; |
இடம் இலி கை கொடைஇலி சொற்கு
| சொற்கு இயல்பு இலி: சொல்லுக்கு இயல்பற்றவன், சொல் திறம் இல்லாதவன்; |
இரு பதம் உற்று இருவினை அற்று இயல்கதியை பெற வேணும்
| இருபதம் உற்று: இரண்டு பாதங்களையும் அடைந்து; இருவினையற்று: நல்வினை, தீவினை இரண்டும் அற்று; |
கெடு மதி உற்றிடும் அசுர கிளை
| அசுர கிளை: அசுரர் கூட்டங்கள்; |
கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்குஇறகோடே
| கிரண குறைப்பிறை: ஒளி வீசும் பிறைச் சந்திரன்; அறுகு: அறுகம் புல்; அக்கு: எலும்பு; இதழ் மலர்: கொன்றை; |
படர் சடையில் புனை நடன பரமர் தமக்கு ஒருபாலா
|
|
பல வயலில் தரள(ம்)நிறை பழனி மலைபெருமாளே.
| தரளம்: முத்து; |
திடமிலி சற் குணமிலி நற் றிறமிலி அற்புதமான செயலிலி மெய்த் தவமிலி நற் செபமிலி...... உன்மீது வைத்த பக்தியில் உறுதி இல்லாதவனும்; நல்ல குணமில்லாதவனும்; எந்த ஆற்றலும் இல்லாதவனும்; அற்புதமான எதையும் செய்யாதவனும்; நன்மையைத் தருவதான ஜபங்களைச் செய்யாதவனும்;
சொர்க்கமுமீதே இடமிலி கைக் கொடையிலி சொற்கு இயல்பிலி நற்றமிழ் பாட .... சொர்க்கத்தில் இடம்பெற முடியாதவனும்; கைகளாலே தானம் கொடுக்கும் வழக்கமில்லாதவனும்; சொல்வன்மை இல்லாதவனும்; உன்னை நற்றமிழாலே பாட இயலாதவனுமான அடியேன்,
இருபதமுற்று இருவினையற்று இயல்கதியைப் பெறவேணும்... உனது திருப்பாதங்களை அடைந்து; நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் அற்றுப் போய் நற்கதியை அடைவதற்கு அருளவேண்டும்.
கெடுமதியுற்றிடும் அசுர கிளைமடியப் பொரும்வேலா... கெட்ட புத்தியை உடைய அசுரர்களுடைய கூட்டங்கள் மடியுமாறு போர்புரிந்த வேலா!
கிரணகுறைப் பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கிறகோடே... ஒளிவிடுகின்ற பிறைச் சந்திரனையும்; அறுகம் புல்லையும்; எலும்பு மாலையையும்; கொன்றைப் பூவையும்; கொக்கின் இறகையும்*
(கொக்கின் உருவம் கொண்டு தேவர்களைத் துன்புறுத்திய குரண்டாசுரன் என்னும் அரக்கனைக் கொன்று, கொக்கின் இறகினைத் தலையில் சூடியவன்—‘கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய், கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்’ அப்பர் சுவாமிகள் ஆறாம் திருப்பதிகம், 39:2)
படர்சடையிற் புனை நடனப் பரமர்தமக்கொருபாலா... (திக்கெல்லாம்) படர்ந்திருக்கின்ற சடையிலே அணிந்தவரும்; நடராசருமான பரமசிவனாருனுடைய ஒப்பற்ற மகனே!
பலவயலிற் றரளநிறை பழநிமலைப் பெருமாளே... பற்பல வயல்களிலும் முத்துகள் நிறைந்திருக்கின்ற பழநி மலையில் எழுந்தருளியுள்ள பெருமாளே!
சுருக்க உரை
கெடுமதியை உடைய அசுரர் கூட்டங்கள் மடியுமாறு போரிடுகின்ற வேலா! ஒளிவீசும் பிறைச் சந்திரனையும் அறுகம் புல்லையும் எலும்பு மாலையையும் கொன்றை மலரையும் கொக்கின் இறகையும் சடையில் அணிந்திருப்பவரும் நடராசருமான சிவனாருடைய பாலா! பற்பல வயல்களிலும் முத்துகள் நிறைந்திருக்கின்ற பழனி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே!
உன்மீது கொண்ட பக்தியில் உறுதியில்லாதவனும்; நற்குணமற்றவனும்; ஆற்றல் எதுவும் இல்லாதவனும்; அற்புதமான காரியங்கள் எதையும் செய்யாதவனும்; நன்மையைத் தருவதான ஜபங்களைச் செய்யாதவனும்; சொர்க்கத்தில் இடம்பெற முடியாதவனும்; தானங்களைச் செய்தறியாதவனும்; சொல்வன்மையற்றவனும்; உன்னை நற்றமிழாலே பாட இயலாதவனுமான அடியேன்,
உன் இரண்டு திருப்பாங்களையும் சேர்ந்து, நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் அழியப் பெற்று நற்கதியடையுமாறு அருள வேண்டும்.