பகுதி - 618
ஆசை அறவேண்டும்
ஆசை அறவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் விராலி மலைக்கானது. மூன்றாவது அடியில் ‘இராவண’ என்று மூன்று முறை பயின்றாலும், ஒவ்வொரு முறையும் பொருள் மாறும்படி அமைந்திருக்கிறது.
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று முதல் ஆறு வரையிலான அனைத்துச் சீர்களிலும் ஒரேவிதமான அமைப்பைக் கொண்ட ‘குறில்-நெடில்-குறில்-குறில்’ என்ற நான்கெழுத்துகளைக் கொண்டவை. ஆறாவது சீரில் மட்டும் கணக்கில் சூராத வல்லொற்று ஒன்று கூடுதலாகப் பயில்கின்றது.
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனத் தனதான
Advertisement
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் ப்ரபையாகி
நிராசசி வராஜத வராகர்கள் பராவிய
நிராயுத புராரியச் சுதன்வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமி வராதியைக் குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற் றடைவேனோ
இராகவ இராமன்முன் இராவண இராவண
இராவண இராஜனுட் குடன்மாய்வென்
றிராகன் மலாரணிஜ புராணர்கு மராகலை
யிராஜசொ லவாரணர்க் கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடு
விராயண பராயணச் செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப் பெருமாளே.