முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 496

இந்தப் பாடல் பொதுப் பாடல்கள்

Updated On : 6 மார்ச், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM

எல்லாத் துன்பங்களையும் ஒழிந்தருளுமாறு வேண்டும் இந்தப் பாடல் பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒற்றொழித்து இரண்டெழுத்து கொண்டவை; மெல்லின மெய்யாகப் பயிலும் ஒற்றெழுத்து இந்த ஒவ்வொரு சீரிலும் (கணக்கில் வராத) இரண்டாம், நான்காம் எழுத்துகளாக அமைந்துள்ளன.  ஆக இந்த அமைப்பில் பயிலும் மெல்லின மெய்கள் இரண்டு.  இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒற்றொழித்து மூன்றெழுத்தும் கணக்கில் வராத மெல்லின மெய் மூன்றாம் எழுத்தாகவும் பயில்கிறது.  இப்படி எல்லாச் சீர்களிலும் மெல்லின மெய் பயின்று சந்தத்தில் சலங்கை குலுங்குகிறது. 

தந்தந் தனந்த தந்தந் தனந்த
      தந்தந் தனந்த                       தனதான

சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
         தண்கொங் கைவஞ்சி             மனையாளுந்
      தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
         தங்கும் பதங்க                   ளிளைஞோரும்
எந்தன் தனங்க ளென்றென் றுநெஞ்சி
         னென்றும் புகழ்ந்து               மிகவாழும்
      இன்பம் களைந்து துன்பங் கள்மங்க
         இன்றுன் பதங்கள்                தரவேணும்
கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
         கொண்டங் குறிஞ்சி              யுறைவோனே
      கொங்கின் புனஞ்செய் மின்கண் டகந்த
         குன்றம் பிளந்த                  கதிர்வேலா
ஐந்திந் த்ரியங்கள் வென்றொன் றுமன்பர்
         அங்கம் பொருந்து                மழகோனே
      அண்டந் தலங்க ளெங்குங் கலங்க
         அன்றஞ் சலென்ற                பெருமாளே.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.