முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(09.06.1998)அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை நிறுத்தக் கோரி மக்களைவையில் எதிர்க்கட்சிகள் அமளி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது 3-வது நாளாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது 3-வது நாளாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

ராமர் கோயில் கட்டுவதற்கான தூண்களை வடிவமைப்பதும், கட்டடப் பொருள்களை ஒருங்கிணைப்பது போன்ற நடவடிக்கைகளும் நாட்டின் மத ஒற்றுமை மட்டுமின்றி தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பாதகமாக அமையும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர்.

இதுபோன்ற பணிகளை சர்ச்சைக்குரிய அயோத்தியில் செய்யாமல் வெகு தொலைவில் செய்தால் அது சட்டத்துக்குப் புறம்பான செயல் ஆகாது என்று முந்தைய ஐ.மு. அரசு எடுத்த நிலையையே பா.ஜ. கூட்டணி அரசும் கொண்டுள்ளது என அரசுத் தரப்பில் விளக்கம் கூறப்பட்டது.

Advertisement

இதே கோரிக்கையை மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது கூச்சலும் குழப்பமும் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments