முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(12.6.1950)புதுக்கோட்டை எலிகளின் தமாஷ்!

திருடனைப் பிடிப்பதற்கு ஜனங்கள் திரண்டனர். போலீஸாரும் வந்தனர். ஆனால் அவர்கள் பார்த்தது திருடனை அல்ல; ஒரு எலிப்படையையே! இந்த ரஸமான சம்பவம் இந்நகரில் நிகந்தது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

திருடனைப் பிடிப்பதற்கு ஜனங்கள் திரண்டனர். போலீஸாரும் வந்தனர். ஆனால் அவர்கள் பார்த்தது திருடனை அல்ல; ஒரு எலிப்படையையே! இந்த ரஸமான சம்பவம் இந்நகரில் நிகந்தது.

மேற்கூறிய சம்பவம், இந்நகரைச் சேர்ந்த சாந்தனாபுரத்தில் நடைபெற்றது. அங்கு ஒரு வீட்டைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்காரர்கள் வெளியூர்க்குப் போயிருந்தார்களாம். வீட்டில் எலிகள் தொல்லை அதிகமாம். ஆளில்லாத வீட்டில் பாத்திரங்களை உருட்டும் சப்தம் மிகவும் பலமாகக் கேட்டது. ஒரு திருடன் வீட்டிற்குள் புகுந்து பாத்திரங்களை அப்புறப்படுத்திக்கொண்டிருப்பதாக எண்ணி பக்கத்து வீட்டுப் பெண்கள் பயந்து போனார்கள்.

அந்தப் பெண்கள் விஷயத்தைப் பக்கத்து வீட்டு ஆடவர்களிடம் தெரிவித்தனர். ஒருவர் கொல்லைப் பக்கமாகச் சென்று கதவைப் பலமாக தட்டவே கதவு திறந்தது. அவர் உள்ளே நுழைந்தார்.

Advertisement

உள்ளே சென்றவர் வெளியே வருவதற்குச் சிறிது தாமதமாயிற்று. அதற்குள் வீட்டிற்கு வெளியே அதிக ஜனத்திரள் கூடியது. திருடன் வீட்டிற்குள் இருப்பதாகவும் அகப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தத் தகவலைக் கேட்டு போலீஸாரும் வந்தனர். எல்லோரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

அவர்கள் திருடனைப் பார்க்கவில்லை. ஆனால் ஒரு எலிப்பட்டாளம் அங்கும் இங்கும் குதித்து ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்தனர். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

பொல்லாத எலிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments