முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று (16.06.1956)செலவு அதிகமான நேர்முகத் தேர்தல்கள் வேண்டாம்; மறைமுகமான தேர்தலை நடத்தலாம் - நேருஜி

தற்பொழுது இந்தியாவில் அமலில் உள்ள தேர்தல் முறையில் சில விசேஷ மாறுதல்கள் அவசியம் என்று பிரதமர் நேரு, காங்கிரஸ் ஊழியர்கள் மாநாட்டில் குறிப்பிட்டார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

தற்பொழுது இந்தியாவில் அமலில் உள்ள தேர்தல் முறையில் சில விசேஷ மாறுதல்கள் அவசியம் என்று பிரதமர் நேரு, காங்கிரஸ் ஊழியர்கள் மாநாட்டில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது :

அடிப்படையில் உள்ள ஸ்தாபனங்களுக்கு இப்பொழுதுள்ள நேர்முகமான தேர்தலுக்குப் பதில் மறைமுகமான தேர்தல்களை நடத்தலாம். அதற்கு மேலுள்ள ஸ்தாபனங்களுக்கு நேர்முகமான தேர்தல் களை நடத்தலாம்.

Advertisement

தற்பொழுது அமலில் இருக்கும் நேர்முகமான தேர்தல் முறையால் அதிகச் செலவாகிறது. இதனால் அரசியல் வாழ்வில் பல விரும்பத்தகாத சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. குறைந்த செலவிலும் சிக்கல்கள், சிரமங்கள் இல்லாமலும் தேர்தல்கள் நடைபெறுவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments