இந்த நாளில் அன்று(17.06.1957)பொதுப் பணத்தை உபயோகிப்பதில் மனசாட்சிப்படி நடக்க வேண்டும்; நேர்மை முக்கியம் - உபராஷ்டிரபதி ராதாகிருஷ்ணன்
நம் நாட்டில் இப்போது குண நெருக்கடி தோன்றியிருக்கிறது. சரியான வழிகாட்டும் தலைமை இருக்குமானால் நாட்டின் குணவியல் தன்மையை மாற்ற முடியும் என்றார் அவர்.
இந்தியா இப்போதுள்ள நிலையைப் பற்றி உப-ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
நம் நாட்டில் இப்போது குண நெருக்கடி தோன்றியிருக்கிறது. சரியான வழிகாட்டும் தலைமை இருக்குமானால் நாட்டின் குணவியல் தன்மையை மாற்ற முடியும் என்றார் அவர்.
அவர் மேலும் பேசியதாவது -
Advertisement
மகாத்மா காந்தியைப்போல் போதிப்பதை நடத்தையிலும் காட்ட வேண்டும். இப்புராதன பாரத நாட்டின் மஹா போதனைகளை அடியொற்றி நடந்தால், நொடிக்குள் நாட்டின் தன்மை மாறிவிடும்.
நாம் பஞ்சசீலம் பேசுகிறோம். மனித சுபாவம் மேன்மையடையாவிடில், மனிதனின் தரம் மாறாவிடில், சர்வதேசத் துறையில் பஞ்சசீலம் என்ன செய்ய முடியும். பஞ்சசீலம் பற்றிய வெற்றுப்பேச்சு நம்பிக்கையூட்டாது. நம்மா நாமே மாற்றிக்கொள்வது முக்கியமாகும்.
வேதனை மிகுந்த நிலையில் உள்ளது நாடு. புதுக் கருத்துகள் ஊடுருவிக்கொண்டு வருகின்றன. ஒருவித மத நம்பிக்கையைப்போல அக்கருத்துகள் பிரகடனம் செய்யப்படுகின்றன.
பொது வாழ்க்கையில் தூய்மை துலங்க வேண்டும். கிராம நிர்வாகத்திலும், தொழிற்சாலைகளை நடத்துவதிலும், சர்க்காரிலும், சட்டசபைகளிலும், அயல்நாட்டு தூதராலயங்களிலும் நேர்மைதான் இத்தருணத்தில் தேவை.
சர்க்கார் பொதுப் பணத்தை உபயோகிப்பதில் மனசாட்சிப்படி நடக்க வேண்டும். பொதுப் பணம் நமது சொந்தக் கூட்டுறவு நிதியாகும். சர்க்கார் பணத்தை நிர்வகிப்பவர்கள் ஒவ்வொருவரும் சிறிதளவுக்குக்கூட துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.