முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(21.06.62)நாட்டில் லஞ்ச ஊழல் அதிகரிப்பு - நேரு வருத்தம்

நாட்டில் லஞ்ச ஊழல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நேரு வருத்தம் தெரிவித்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

நாட்டில் லஞ்ச ஊழல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நேரு வருத்தம் தெரிவித்தார்.

சர்க்கார் காரியாலயங்களில் லஞ்ச ஊழல் நடவடிக்கைகளை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

லஞ்ச ஊழல் ஒழிப்பு விஷயத்தில் உத்தியோகபூர்வ நடவடிக்கை மட்டும் போதாது. தன்னார்வ சுயேட்சை ஸ்தாபனங்களும் இவ்விஷயத்தில் பெருமளவில் செய்ய முடியும்.

Advertisement

மத்திய லஞ்ச ஒழிப்பு போர்டு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், அதனால் ஏற்படக்கூடிய பயன்கள் பற்றி எனக்குப் புரியவில்லை.

லஞ்ச ஊழல் ஒழிப்பு பற்றி முதல் மந்திரிகளுக்கு கடிதங்கள் எழுதி வருவதாகவும், தொடர்ந்து எழுதுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments