முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(22.06.1963)2500 மைல் வேகத்தில் பறக்கும் விமானம்; அமெரிக்கா தயாரிக்கும் - கென்னடி அறிவிப்பு

மக்கள் பிரயாணம் செய்வதற்காக மணிக்கு 2500 மைல் வேகத்தில் பறந்து செல்லக்கூடிய சூப்பர் சானிக் போக்குவரத்து விமானத்தை தயாரிக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமெரிக்க ஜனாதிபதி கென்னடி தெரிவித்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

மக்கள் பிரயாணம் செய்வதற்காக மணிக்கு 2500 மைல் வேகத்தில் பறந்து செல்லக்கூடிய சூப்பர் சானிக் போக்குவரத்து விமானத்தை தயாரிக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமெரிக்க ஜனாதிபதி கென்னடி தெரிவித்தார்.

இன்னும் 7 ஆண்டுகளுக்குள் இந்த விமானத்தை தயாரித்து பறக்கவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு குறைந்தபட்சம் ரூ.480 கோடி செலவாகும் என்றார் கென்னடி.

இதே சமயத்தில் மணிக்கு 1450 மைல் வேகத்தில் செல்லக்கூடிய விமானத்தைத் தயாரிப்பதில் பிரிட்டிஷ் பிரெஞ்சு நிறுவனங்கள் கூட்டாக ஈடுபட்டுள்ளன. இந்த முயற்சிக்கு பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசுகளும் ஆதரவளித்து வருகின்றன. இவற்றில் முதல் தயாரிப்பு இன்னும் 5 ஆண்டுகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

கான்கார்ட் சூப்பர் சானிக் விமானங்கள் எனப்படும் இந்த வகை விமானங்களில் ஆறுக்கு பான் அமெரிக்கன் ஏர்வேஸ் கம்பெனி ஆர்டர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments