இந்த நாளில் அன்று(26.06.1967)விருந்துக்காக பஸ் பர்மிட்டா? - சென்னை அசெம்பிளியில் ருசிகர விவாதம்
விருந்து உபசாரம் செய்தவர்களுக்கும் உணவிட்டவர்களுக்கும் முந்தைய அரசாங்கம் பஸ் பர்மிட்டுகளை வழங்கியதாக திமுக மெம்பர் ஏ.கே.மூர்த்தி அசெம்பிளியில் புகார் செய்தார்.
விருந்து உபசாரம் செய்தவர்களுக்கும் உணவிட்டவர்களுக்கும் முந்தைய அரசாங்கம் பஸ் பர்மிட்டுகளை வழங்கியதாக திமுக மெம்பர் ஏ.கே.மூர்த்தி அசெம்பிளியில் புகார் செய்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன் ஒழுங்குப் பிரச்னையை எழுப்பினார். யார் விருந்து போட்டார்கள், யாருக்கு பஸ் பர்மிட் தரப்பட்டது என்பதையெல்லாம் ருசுக்களுடன் சொல்ல வேண்டுமென்றார்.
பொதுப்படையாக இருப்பதால் ஒழுங்குப் பிரச்னையாகாது என்று தலைமை வகித்த பி.மலைச்சாமி தெரிவித்தார். எதையும் ருசுக்களுடன் சொல்வது நல்லது என்று கருத்திருமன் மீண்டும் சொன்னார்.
Advertisement
இத்தருணத்தில் முதல்வர் அண்ணாதுரை குறுக்கிட்டு, சாப்பாடு போட்டு விருந்து வைத்து பஸ் பர்மிட்டுகள் வாங்கியதாக மெம்பர் சொன்னதற்காக வருந்துகிறேன் என்று கூறினார்.
மறுகணமே அவரது பேச்சில் நகைச்சுவை குறுக்கிட்டது. அவ்வளவு மலிவாக பஸ் பர்மிட் வாங்கியிருக்க முடியாது. அதைவிட பெரிதாகக் கொடுத்துத்தான் பர்மிட் வாங்கியிருப்பார்கள் என்று முதல்வர் சொன்னதும் சிரிப்பொலி எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவரும் இதில் சேர்ந்துகொண்டார்.