இந்த நாளில் அன்று(10.05.1968)தனித் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு நெடுநாளாகிவிட்டது - தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை
தனித் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு நெடுநாளாகிவிட்டது என்று தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சில பகுதிகளில் சுதந்தரத் தமிழ்நாடு கொடி இயக்கம் நடப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாதிரியான செயலை மக்கள் கண்டிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரை கூறினார்.
சுதந்தரத் தமிழ்நாடு கொடி இயக்கம் போன்ற தேசிய விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நான்கு அல்லது ஐந்து சுவரொட்டிகளில் தேசிய விரோத வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதில் சுதந்தரத் தமிழ்நாடு கொடி ஏற்றப்படும் என்ற அறிவிப்பு காணப்பட்டது. இதைப் பற்றிய செய்தியைக் குறிப்பிட்டு, அண்ணாதுரை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
Advertisement
தனித் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு நெடுநாளாகிவிட்டது என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
இந்தியாவில் தலைசிறந்த ராஜ்யமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். இதற்கு முயல்வேன். ஆனால், இந்திய அரசுக்கு குந்தகமாக எதையும் செய்ய மாட்டேன் என்று அண்ணாதுரை கூறினார்.