கல்வி மணி

அரசு தேர்விற்கான அறிவரங்கம்: தமிழ் இலக்கியம்-3

எதிப்பாராத முத்தம், சேர தாண்டவம், குறிஞ்சித் திட்டு, கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா, காதல் நினைவுகள், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கழைக்கூத்தியின் காதல், தமிழச்சியின் கத்தி, அமைதி,

தினமணி

பாரதிதாசன்

*  இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்

*  சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர், பாவேந்தர்.

*  காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)

*  பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்

*  திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.

*  படைப்புகள்: எதிப்பாராத முத்தம், சேர தாண்டவம், குறிஞ்சித் திட்டு, கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா, காதல் நினைவுகள், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கழைக்கூத்தியின் காதல், தமிழச்சியின் கத்தி, அமைதி, இளைஞர் இலக்கியம், செளமியன், நல்ல தீர்ப்பு, தமிழ் இயக்கம், இரண்யன் அல்லது இணையற்ற வீரன், காதலா கடமையா? சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.

*  சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நூல் பொதுவுடைமையை வலியுறுத்துகிறது.

*  கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.

*  கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.

*  இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.

*  பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.

*  பாரதியார் மீது கொண்ட காதலால் சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

*  கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் - பாரதிதாசன்.

*  நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் - பாரதிதாசன்.

*  புதியதோர் உலகம் செய்வோம் - பாரதிதாசன்.

*  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்.

*  கொலை வாளினை எடடா - மிகு கொடியோர் செயல் அறவே - பாரதிதாசன்.

*  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - பாரதிதாசன்.

*  தமிழுக்கு அமுதென்று பேர் - இந்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - பாரதிதாசன்.

*  கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா - பாரதிதாசன்.

காரைக்கால் அம்மையார்

*  காரைக்கால் அம்மையார் இயற்பெயர் - புனிதவதி. பிறந்த ஊர் - காரைக்கால். இவரது பாடல் மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

*  திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிபட்டவர் காரைக்கால் அம்மையார்.

*  அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர். இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்.

*  இவர் தலையால் நடந்த திருவாலங்காட்டில் தம் கால் பதிக்க அஞ்சி ஞானசம்பந்தர் ஊர்ப்புறத்தே தங்கினார்.

எண் குறிப்புகள்

*  பூதங்கள் ஐந்து, நிலம் நீர், தீ, காற்று ஆகாயம் ஆகியன.

*  ஞானந்திரியங்கள் ஐந்து. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.

*  கார்மேந்திரயங்கள் ஐந்து. வாக்கு(வாய்), பாணி (கை), பாதம் (கால்), பாயு (மலவாய்), உபஸ்தம் (கருவாய்) ஆகியன.

*  தன் மாத்திரைகள் ஐந்து. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியன.

*  அந்தக் கரணங்கள் (அக கருவிகள்) நான்கு. மனம், புத்தி (அறிவு), சித்தம் (நினைவு) அகங்காரம் (முனைப்பு) ஆகியன.

*  மலங்கள் மூன்று. ஆணவம், கன்மம், மாயை ஆகியன.

*  உடல்கள் மூன்று. பருவுடல், நுண்ணுடல், காரண உடல் ஆகியன.

*  கர்மங்கள் மூன்று. இருப்பு வினை (சஞ்சிதகர்மம்), நுகர்வினை (பிராத்த கர்மம்), நிகழ்வினை (ஆகாமிய கர்மம்) ஆகியன.

*  குணங்கள் மூன்று. ராஜஸம் (மன எழுச்சி), தாமஸம் (மயக்கம்), சாத்வீகம் (அமைதி) ஆகியன.

குமரகுரூபரர்

*  பிறந்த ஊர் ஸ்ரீவைகுண்டம். ஐந்து வயது வரை ஊமையாக இருந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றவர் குமரகுரூபரர்.

*  மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம் ஆகிய நூல்களை மதுரையிலும், ஸ்ரீவைகுண்டத்தில் கைலைக் கலம்பகத்தையும், சிதம்பரத்தில் சிதம்பர மும்மணிக் கோவையையும் இயற்றியவர்.

*  காசியில் இவ்ர் நிறுவிய மடம் குமாரசாமி மடம். பிரபந்த வேந்தர் என்று அழைக்கப்படுகிறார்.

அருணகிரியார்

*  ஊர் திருவண்ணாமலை முத்தைத்தரு என்று முருகன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடியவர் அருணகிரியார்.

*  சந்தக் களஞ்சியம் எனப்படும் திருப்புகழை இயற்றியவர். சந்த வேந்தர் என்று அருணகிரியார் புகழப்படுகிறார். கனதர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில்

விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

*  முருக நாயனார் என்று புகழப்படுபவர். முவரை கந்தர் அனுபூதி சொன்ன என்தை - என்று போற்றியவர் தாயுமானவர் ஆவார்.

ஒட்டக்கூத்தர்

*  இயற்பெயர் கூத்தர். விக்கிர சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராக இருந்தவர்

ஒட்டக்கூத்தர்.

*  மூவர் உலா, குலோத்துங்கன் பிள்லைத் தமிழ் (தமிழின் முதல் பிள்ளைத் தமிழ் நூல்), தக்கயாகப் பரணி (வீரபத்திர பரணி), தில்லை உலா போன்ற நூல்களை ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார்.

*  கூத்தனூரில் கலைமகளுக்கு கோயில் கட்டியவர் இவர். கவிராட்சதன், காளக்கவி, சர்வஞ்ஞகவி போன்ற பட்டங்களை உடையவர்.

*  கம்பர் கூழுக்குப் பாடியவர், கூத்தர் மன்னனுக்குப் பாடியவர் என்பவர்.

பாம்பன் சுவாமிகள்

*  இயற்பெயர் குமரகுருதாசர். இராயப்பேட்டை (சென்னை) பாலசுப்ரமணிய பக்த ஜனசபையைத் தொடங்கியவர்.

*  அருணகிரியாருக்கு குருபூஜை எடுக்கச் செய்தவர். இக்கால அருணகிரி என்று போற்றப்பட்டவர்.

ஆழ்வார்கள்

*  பொய்கையாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம். சங்கின் அம்சமாகப் பிறந்த பொய்கையாழ்வார் முதன் முதலாக திருமாலின் பத்து அவதாரங்களைப் பாடியவர் ஆவார்.

*  காலம் - 7ம்நூற்றாண்டு

*  மகாபலிபுரத்தில் பிறந்த பூதத்தாழ்வார் பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக்கொண்டார். கதாயுதத்தின் அம்சமாகப் பிறந்தவர்.

*  மயிலாப்பூரில் வாளின் அம்சமாகப் பிறந்த பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்.

*  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவருமே முதலாழ்வார்கள் எனப்படுவர்.

*  சக்கரத்தின் அம்சமாக திருமழிசையில் பிறந்தவர் திருமழிசையாழ்வார்.

*  ஸ்ரீவில்லிபுத்தூரைச் சார்ந்த பெரியாழ்வார் கருட அம்சமாகப் பிறந்தவர். பட்டர் பிரான் என்றும் குறிப்பிடப்படுபவர். இவரது வளர்ப்பு மகள் ஆணடாள். ஆண்டாளுக்குக்

கோதை என்று பெயரிட்டார். பிள்ளைத் தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையின் முன்னோடி பெரியாழ்வார்.

*  பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாளாழ்வார் துளசி வனத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் ஆவார். சூடிக் கொடுத்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனப்பட்டார்.

*  இறைவனுக்கு மனைவியானதால் நாச்சியார் எனப்பட்டார். திருப்பாவை, திருமொழி ஆகியவற்றைப் பாடியவர். திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர் இராமானுஜர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT