சுவாமிஜியின் மனத்தில் பல திட்டங்களும் பல எண்ணங்களும் எழுந்தவண்ணம் இருந்தன. கூடவே, தமது ஆயுட்காலம் குறுகியது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. சென்னை, ஐதராபாத், பம்பாய் என்று பல இடங்களுக்குப் போக வேண்டும், மிஸ் சேவியருடன் இங்கிலாந்திற்குப் போக வேண்டும் போன்ற பல திட்ங்களை அவரது கடிதங்களில் காணலாம். இந்தக் குறுகிய காலத்தில் எதைச் செய்வது, எதை விடுவது? தாம் எதைக் கொடுக்க வேண்டும் என்று குருதேவர் பணித்து, தேவியின் அருளைத் தம்முள் நிறைத்தாரோ அந்தப் பணியைச் செய்தாகி விட்டது, அந்தச் செய்தியைக் கொடுத்தாகி விட்டது என்ற நிறைவு சுவாமிஜியிடம் இருந்தது. இருப்பினும் சில கடைசிக்கட்ட வேலைகள் எஞ்சியிருப்பது அவரது மனத்தை நெருடியது. அவற்றுள் முக்கியமான ஒன்று பேலூர் மடத்திற்கு ஓர் அமைப்பு ரீதியான வடிவம் கொடுப்பது.
இதற்கான பல வழிகளை ஆலோசித்த சுவாமிஜி கடைசியாக மடத்திற்கென்று நிர்வாகிகள் குழு ஒன்டிறத் தேர்ந்தெடுத்து அதன் பொறுப்பில் அனைத்தையும் விடுவதென முடிவு செய்தார். அதன்படி 1901 ஜனவரி 30ம் நாள் நிர்வாகிகள்குழு ஒன்று அமைக்கப்பட்டு பிப்ரவரி 6ம் நாள் பதிவு செய்யப்பட்டது. பதிவாளர் அலுவலகத்திற்கு சுவாமிஜி செய்யப்பட்டது. பதிவாளர் அலுவலகத்திற்கு சுவாமிஜி சென்றார். பிரம்மானந்தர், பிரேமானந்தர், சிவானந்தர், சாரதானந்தர், அகண்டானந்தர், திரிகுணாதீதானந்தர், ராம கிருஷ்ணானந்தர், அத்வைதானந்தர், சுபோதானந்தர், அபேதானந்தர், துரியானந்தர் ஆகியோர் அதன் நிர்வாகிகள் ஆயினர். சுவாமிஜி இதில் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களை மட்டுமே சேர்த்தார். தமது சீடர்களைச் சேர்க்கவில்லை. இந்த நிர்வாகிகளிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார். தாம் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுபட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் அத்புதானந்தர் மட்டும் இந்தக் குழுவில் சேர மாட்டேன் என்று கூறிவிட்டார். பிப்ரவரி 10ம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் முதலானோரைத் தேர்ந்தெடுத்தனர். பிரம்மானந்தர் தலைவர் ஆனார். சாரதானந்தர் செயலர் ஆனார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.