கண்ணோட்டம்

மதத்தில் பொருளாதார அம்சம்

இந்தியாவும் மற்ற நாடுகளுடன் முன்னேற வேண்டுமானால் ஏழைகளும் பாமரர்களும் முன்னேற வேண்டும். அதனால்தான் ஏழைகளுக்கும் கல்வியைப் போதிக்குமாறு அவர் கூறினார்.

தினமணி

இந்தியாவும் மற்ற நாடுகளுடன் முன்னேற வேண்டுமானால் ஏழைகளும் பாமரர்களும் முன்னேற வேண்டும். அதனால்தான் ஏழைகளுக்கும் கல்வியைப் போதிக்குமாறு அவர் கூறினார். மதம் இதற்கு வகை செய்யும்போது தானும் வாழ்கிறது. இனி வரும் காரத்தில், பொருளாதார அம்சம் உள்ள மதம் மட்டுமே நிலைக்கும் என்று உறுதியாக நம்பினார் சுவாமிஜி. பொருளாதார மதிப்பு இருக்கின்ற மதமே வெற்றி பெறும். ஆயிரக்கணக்கான ஒரேவித மதப் பிரிவுகள் ஆதிக்கத்திற்குப் பாடுபடலாம். ஆனால் பொருளாதாரப் பிரிச்சினையைத் தீப்பவைகளே ஆதிக்கத்தைப் பெறுகின்றன என்கிறார் அவர். இவ்வாறு பொருளாதார வளர்ச்சியையும் இந்து மதத்தின் ஓர் அங்கமாக்கினார் சுவாமிஜி. இது அவரது கொடைகளில் ஒன்று ஆகும்.

மதம் என்றால், ஆன்மீகம் என்றால் இவ்வுலக வாழ்க்கையை மறுத்து, மறுவுலக வாழ்க்கையைக் கூறுவது என்ற நிலைமையைத் தமது தீர்க்கதரினத்தால் மாற்றினார் சுவாமிஜி. மதம் மனிதனது பொருளாதாரத்தை, வாழ்க்கைத்தரத்தை உயர்ந்த வேண்டும் என்று கருதினார் அவர். சுவாமிஜியின் உத்வேகத்தால் தூண்டப்பட்டு சுதந்திரம் பெற்றுவிட்டோம். ஆனால் அவர் அளித்த உத்வேகத்தால் எழுந்த இந்தியர்கள் சரியான கல்வியும் வழிகாட்டுதலும் இல்லாததால் முழுமையாக விழிப்புற வாய்ப்பின்றிப் போய்விட்டது. எனவே சுவாமிஜியின் கருத்துப்படி, இந்தியா மீண்டும் தனது பழைய பெருமையைப் பெற வேண்டும், அதற்கு அனைவருக்கும் சுவாமி விவேகானந்தர் கண்ட கல்வி அளிக்கப்பட வேண்டும். அப்போது அவர் கண்ட லட்சிய இந்தியா தோன்றும்.

இந்தக்குழப்பத்திலிருந்தும் போராட்டத்திலிருந்தும் பெருமை பொருந்தியதாக, யாராலும் வெல்லப்பட முடியாததாக, வருங்காலத்தில் ஒரு முழுமை பெற்ற இந்தியா எழுவதை என் மனக்கண்ணால் நான் காண்கிறேன்.

ஆற்றல்மிக்க இந்த இந்தியா உலகை வெற்றி கொள்ளும். அதனால்தான் ஓ இந்தியா! எனது ஆன்மீகத்தால் உலகை வெற்றி கொள்!' என்று முழங்கினார் சுவாமிஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

கலைமாமணி விருதுகள் - புகைப்படங்கள்

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT