கண்ணோட்டம்

பேலூர் மடத்தில் சுவாமிஜி

கிழக்கு வங்காள யாத்திரையை முடித்துக் கொண்டு, 1981 மே மாதம் பேலூர் மடத்திற்குத் திரும்பியதுடன் சுவாமிஜியின் பொதுவாழ்வு ஒரு நிறைவுக்கு வந்தது. அதன்பிறகு ஒருமுறை காசிக்குச் சென்று வந்தார்.

தினமணி

கிழக்கு வங்காள யாத்திரையை முடித்துக் கொண்டு, 1981 மே மாதம் பேலூர் மடத்திற்குத் திரும்பியதுடன் சுவாமிஜியின் பொதுவாழ்வு ஒரு நிறைவுக்கு வந்தது. அதன்பிறகு ஒருமுறை காசிக்குச் சென்று வந்தார். மற்றும் அவ்வப்போது கல்கத்தாவிற்குப் போய் வந்ததைத் தவிர, பொதுவாக அவர் பேலூர் மடத்திலேயே வாழ்ந்தார். பிரம்மச்சாரிகள் மற்றும் துறவிகளுக்கு வகுப்புகள் நடத்துதல், பாட்டு, தியானம் மிகவும் தேவைப்பட்ட இந்த நிலையில் தமது சகோதரத் துறவிகளும் சீடர்களும் கூறுவதை அப்படியே கேட்டு நடந்தார் சுவாமிஜி. இந்த நாட்களிலும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பேலூர் மடத்திற்குப் பலர் வந்தார்கள். அவர்களைச் சந்தித்தார் சுவாமிஜி.

மடத்துப் பணிகளில் எப்போதுமே ஒரு கண் வைத்திருந்தார் சுவாமிஜி. மடத்தில் அவரது வாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருந்தது. சிலவேளைகளில் ஒரு கௌபீனம் மட்டும் கட்டியபடி மடத்தில் வளைய வருவார், சிலவேளைகளில் சமையலறையில் சென்று சமையலில் உதவுவார். சிலவேளைகளிலோ தமது அறையில் மணிக்கணக்காகப் புத்தகங்களில் மூழ்கியிருப்பார். எப்போது தோன்றுமோ அப்போது அங்கே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிடுவார் அது கங்கைக் கரையாக இருக்கலாம் அல்லது ஏதாவது மரத்தடியாக இருக்கலாம். அவர் எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் அது மடத்தில் ஆன்மீக அலையை அள்ளி வீசியபடி இருந்தது. வில்வ மரத்தடியும், அவரது அறைக்குக் கீழே உள்ள மாமரத்தடியும் அவர் விரும்பி தியானம் செய்கின்ற இடங்களாக இருந்தன.

அவர் தியானத்தில் மூழ்கும்போது புறவுலக நினைவை முற்றிலும் இழந்துவிடுவார். காலை வேளைகளில் பொதுவாக அந்த மாமரத்தடியில் தமது கட்டிலை இட்டு அங்கே அமர்ந்தபடி படிக்கவோ, எழுதவோ செய்வார், பேசிக் கொண்டிருப்பார். சில வேளைகளில் பரிவிராஜக நாட்களைப் போல் நீண்ட அங்கி அணிந்து, சிந்தனையில் மூழ்கியவராக அடுத்துள்ள கிராமப் பாதைகளில் நடப்பார்.

கங்கைக் கரையில் தமது அறையின் வெளியிலுள்ள வராந்தாவில் அமர்ந்தபடி எதிர்த்திசையில் தெரிகின்ற தட்சிணேசுவரக் காளிகோயில் கோபுரங்களைப் பார்ப்பார். அந்த நினைவுகளில் மூழ்குவார். அவரது முகத்தில் சொல்லொணா வேதனை ஒன்று வெளிப்படும். மறுகணம் மகிழ்ச்சியும் பொலிவும் ஒளிர்ந்து தோன்றும். வெளியுலகிற்கு அவர் உலக குரு, தேசபக்தர், ஆச்சாரியர், உலகை வென்றவர், துறவிவேந்தர் சகோதரத் துறவிகளுக்கு அவர் எங்கள் நரேன், தலைவர், நண்பர், புனிதர் பகவன் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் அன்னை ஸ்ரீசாரதா தேவிக்கோ அவர் அன்பு மகன் சீடர்களுக்கோ அவர் எல்லாமாக விளங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

கலைமாமணி விருதுகள் - புகைப்படங்கள்

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT