கவிதைமணி

சுனாமியின் சுவடுகள் : பரந்தூர் ராமசாமி

கவிதைமணி

உலகத்து நாடெல்லாம் பெருமை கொள்ளும்
உயர்வான நட்புதனை நாம் வளர்த்தால்
பலர் வாழ்த்தி புகழ்ந்துரைக்க உலகத் தோடு
போற்றுகின்ற நல்வழியே நடந்து வந்தால்
நிலநடுக்கம் சுனாமிதனை தாமறிந்து
நிலையறிந்து தற்காப்பு செய்ய்து கொண்டால்
மலருகின்ற வாழ்க்கையிலே துயரமுண்டோ
மகிழ்ச்சியது வாழ்நாளில் குறைவதுண்டோ

எதிர்காலம் என்னென்ன நடக்குமென்று
எல்லாமும் அறிந்திடுவார் அறிவில் வல்லார்
கதிகலங்க கதறுவைத்த சுனாமி யென்னும்
கொடும் அரக்கன் தீச்சுவடால் வானை எட்டும் 
புதிய அலை பேராழி சீற்றத்தாலே 
பிள்ளையோடு மக்களெல்லாம் இந்த மண்ணில்
பத்ஹியிஅமிட்டு வைத்தாற்போல் வரிசையாக 
பிணமாகப் போனாரே கொடுமையன்றோ

அழிவுதரும் சுனாமிதனை துணிந்து வெல்ல 
அறிந்ததனை தடுட்த்து நிற்கும் செயலைச் செய்வோம்
விழிமூடிக் கிடப்பதாலே வெளிச்சம் உண்டோ
விதியென்று விட்டுவிட்டால் வாழ்க்கை யுண்டோ
பழிதனை பிறர் மீது சொல்லிக் கொண்டு 
பரிதவித்து நிற்பதிலே பயனும் ஏது..?
அழியாத வரலாறு படைக்க வல்ல
ஆற்றலினால் புது உலகம் மலரவைப்போம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT