கவிதைமணி

சுனாமியின் சுவடுகள்: ர. கோபாலகிருஷ்ணன்

கவிதைமணி

கல்தோன்றா மண்தோன்றா நேரத்தில்
கடல் ஆழி ஒன்று பிறந்தது
சீறி பாய்ந்த ஆழி இங்கு 
சிவப்பு கம்பளமிட்டது

விண்ணுயர்ந்த வள்ளுவனை
வியக்க தாண்டி வந்தது
வாய்மூடி வந்து வந்ததை 
இழுத்துச் சென்றது

மழையை படைத்த ஆழி இங்கு
மரணம் பல படைத்தது
பனிகாலத்தில் வந்து பலரை
பார்த்து விட்டு சென்றது

மழைகாலத்தை எங்கள் கண்ணில் 
மறைத்து விட்டு சென்றது
மெளனமகா வந்து சிலரை
மாயமாக்கிச் சென்றது..
முத்துப் பவளம் சிப்பி
வற்றாமல் தந்தது
முதுமை பாசம் சிரிப்பு
வருந்தாமல் எடுத்தது

வேய்யோனும் மறைத்து
விரைந்து விரைஇந்து வந்தது
வேலாயுதம் இல்லாமல்
குத்தி கழித்து போனது

வேங்கையாய் இருந்து 
வேகமாய் வந்தது
வெறும் கண்ணீரை மட்டும்
விட்டுச் சென்றது

பாவப்பட்ட மக்களை 
பறந்து வந்து அடித்தது
பயனற்ற மணலில் 
பள்ளம் தோன்றி புதைத்தது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT