பட்டதாரி: பாலா. ஆர். எம்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM
படித்து கிழித்தால் பட்டதாரி !
தெருவுக்குள் ஆயிரம் பேர்கள்
அது மாதிரி !
கடைசியில் தந்த பட்டதாரி காகிதம்
கசங்கி போன சோக கீதம்,
பட்டதாரி என்றாலே பட்டினி போடும் சமூகம்,
இறுதியாக இயந்திர படிப்பை
மூட்டை கட்டி வைத்து
இரண்டு வண்டி மாடுகளை கட்டி
விவசாயத்தில் தஞ்சம் அடைந்தேன்.
படித்தவன் என்றால் மாடு
பால் கறக்குமா !
நிலம் தான் பயிறு செய்யுமா !
வாழ வழியில்லா எனக்கு
கடைசியில் வீடு கொடுத்த பட்டம்
உதவாக்கரை....