முகப்பு
கவிதைமணி

பட்டதாரி: -கோ. மன்றவாணன்

Updated On : 7 நவம்பர், 2016 at 3:21 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM

பூமிக்கு வந்த
ஞான வானம்
அன்றைய பட்டதாரி

இலட்சங்கள் தா  
பட்டங்கள் இதோ
கல்லூரிக் கடை

ஆங்கிலப் பட்டதாரி
கையில் தலைகீழாக
இந்தியன் எக்ஸ்பிரஸ்

Advertisement

படிக்காத கொத்தனார்
விஐபி நகரில்
சொந்த வில்லா

கல்லூரிக் குவியல்
பட்டதாரிகள் உற்பத்தி
வேலை இல்லாத் தமிழ்நாடு

பட்டதாரிகள் கைகளில்
பிச்சைப் பாத்திரங்கள்
நாளைய தேசம்

வெறுங்கையோடு சரஸ்வதி !
வீணையை விற்றுவிட்டார்கள்
கல்வி முதலாளிகள்

கட்டுக் கட்டாகக்
கல்விப் பட்டங்கள்
பழைய பேப்பர் கடை

சுழல் நாற்காலியில் மேஸ்திரி
டீ, சிகரெட் வாங்கித்தரும் வேலைக்கு
இன்ஜினிரிங் பட்டதாரி

சரஸ்வதி தேவி வீட்டில்
ஒப்பாரி கேட்கிறதுசிதைத்தீயில் கல்வி

-கோ. மன்றவாணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.