பட்டாதாரி: H ஹாஜா மொஹினுதீன்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM
ஆயிரம் கனவுகளை -அடிமனதில் புதைத்துவைத்து ;பட்டம் பெரும் நாளை எண்ணி -பட்டாம் பூச்ச்சாய் பறந்ததென்ன ? சாதித்து விட்ட சந்தோசம் !சலசலப்புக்கு பஞ்சமில்லை !பட்டம் வாங்கும் முன்னே நான் -பகல் கனவில் மூழ்கினேன் ! படிப்புக் கேற்ற வேலை தேடி -பகலெல்லாம் அலைந்ததில் ;பஞ்சம் மட்டும் கூடவர -பரிகசிக்கும் பட்டமே !பட்டதாரி என்று சொல்லி - பரிகசிக்கும் உலகிலே ;பாவப்பட்ட மனிதனாய் -பல்லிளித்து அலைகிறேன் !