முகப்பு
கவிதைமணி

வழி தவறிய பயணங்கள்: பொன் . குமார்

Updated On : 14 நவம்பர், 2016 at 5:00 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM

வாழ்க்கைப் பயணத்தில்
வழி தவறி போனவர்கள்
வரிசை நீண்டு கொண்டேயிருக்கிறது.

வழி தவறியதால்
வாழ்க்கையை இழந்து
வருத்தப் பட்டு கொண்டிருக்கிறார்கள்.

பாதை மாறும் பயணங்கள்
எட்ட முடியாது இலக்கு.
பாதை மாறிய மனங்கள்
திரும்புவது என்பது விலக்கு.

Advertisement

பாதை மாறும் வாகனம்
விபத்து ஏற்படுவது நிச்சயம்.
வழி தவறிய மனிதர்களும்
தோல்வி அடைவது சத்தியம்.

பாதைகள் மாறினாலும்
பயணம் மாறக் கூடாது.
பயணமே மாறினாலும்
பாதை மாறக் கூடாது.

வாழ்க்கைப் பயணத்தில்
வருவோர் போவோர் உண்டு.
வழி தவறிய கணத்தில்
வருத்தப் படுவோர் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.