கவிதைமணி

எனை நனைத்த மழை: கவிஞர் கே. அசோகன்.

கவிதைமணி
வள்ளுவனும் தன்குறளில் அழகாய் தான்    வான்சிறப்பை பலவாறு எழுதி வைத்தான்அள்ளுகின்ற நெற்புதையல் வேண்டு மென்றால்    அழகாய்தான் மழையும் பெய்தல் வேண்டும்துள்ளிவிளையாடும் மழலை யெல்லாம்    தூவிடும் சாரலிலே நனைதல் வேண்டும்புல்முதலாய் மரங்களும் செழிப்பதற்கே    பெய்துதான் எனை நனைத்தல் வேண்டும்திரளான கருமேகங் கூட்டம் பார்த்தே    தெருவினிலே நின்றிருந்த வேளை தனில்உரக்கவே குரல்கொடுத்து உள்ளே வா     உனக்கு தடுமன் பிடிக்கு மென சொல்லஇரும்மா ! மழைச் சாரல் பிடிக்குமென    இருந்திட்ட வேளை தன்னில் ஆங்கேசடசடவென பொழிந்திட்ட  மழை யதனின்    சாரலும் எனை நனைத்து விட்டனவே!புரண்டோடும் மழைநீரில் துள்ள லாய்    போகின்ற மீன்களை பிடித்த தாலேபிரம்பெடுத்து புடைத்திட்ட என் தந்தைக்கு     புன்னகையை பரிசாக அளித்த தாலே!திருந்தாது ”இதுவென்றே”  வெளியே தள்ளி    திண்ணைதான் இருப்பிட மென் றுரைத்தும்வருந்தாமல் மகிழ்ச்சியில் குதித்தே துள்ளி    வான்மழையில் மீண்டும் நனைந் தேனே!காசுகொடுத்து வாங்கிய நோட்டு தனில்    கணக்கின்றி தாட்களை  கிழித்து தான்ஆசையோடு கப்பல்க ளாய் செய்து    அதனை மழைநீரில் ஓடவே விட்டுவீசுகின்ற காற்றின் பக்கம் போகின்ற    வேகம் பார்த்தே வியந்தே நிற்கையில்வீசுகின்ற காற்றோடு நன்மழைப் பெய்தே    ஆசையான காகித கப்பல்களும் ஆடித் தான்அமிழ்ந்துதான் போனாலுமே அடுத் தடுத்து    ஆசையாய் நனைந்தேன்  மழையில் தானே!                        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மேற்கு வங்க எஸ்ஐஆா் பணியில் பிற மாநில நீதிபதிகள் - உச்சநீதிமன்றம் அனுமதி

ரயில்வே நிா்வாகம் அலட்சியம்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றச்சாட்டு

எழும்பூா் நிலைய பராமரிப்புப் பணி: புறநகர் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் பாதிப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

SCROLL FOR NEXT