முகப்பு
கவிதைமணி

யாரிட்ட சாபம்:  சரஸ்வதி ராசேந்திரன்

Updated On : 21 மே, 2018 at 4:01 PM
பகிர்:

யாரிட்ட சாபமிது
ஊர்தோறும் வெட்ட வெளி மண் தரை
ஊர் நகரில் மாறிய சட்டதிட்டம்
மனிதரெல்லாம் மிருகமாய் மாறி
ஆடுகின்ற ஆட்டங்கள்
நாட்டமில்லை உழைத்துண்ண
படர்ந்திடும் நோய் போல
தொடர்ந்திடும் துயர்கள் தினமும்
உழவை புதைத்து வீட்டு
தொழிற் கல்விப் போதிக்கின்றார்
அஹிம்சை போதித்த நாட்டில்
அடுக்கடுக்காய் கொலைகள்
கற்பிழந்த பெண்டிரெல்லாம் சோரம்போக
கணவனையே கொலைசெய்யும் கோரம்
அறத்தொழிலாம் ஆசிரியத்தொழிலை
அவமானப் படுத்துகின்றார் பதவிக்காக
அய்யகோ  யாரிட்ட சாபமிது
தமிழ் நாடே சுடுகாடாய் ஆக

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.