நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

துளசிமாலையைப் பெற

செ.குளோரியான்

பாஇயல் வேத நல் மாலை பலகொண்டு
தேவர்கள், மாமுனிவர் இறைஞ்ச நின்ற
சேஅடிமேல் அணி செம்பொன் துழாய் என்றே
கூவுமால், கோள் வினையாட்டியேன் கோதையே.

(தாய் சொல்கிறார்)

என்னுடைய மகள், மலர்மாலையைப் போன்றவள், எம்பெருமான் மீது நேசம் வைத்துள்ளாள், தேவர்களும் சிறந்த முனிவர்களும் சந்தங்களோடு அமைந்த வேதங்களாகிய நல்ல பல மாலைகளைக்கொண்டு எம்பெருமானைத் துதிக்கிறார்கள், அவர்கள் எல்லாரும் வழிபடுகிற சிறந்த திருவடிகளின்மேல் விளங்கும் அழகிய, செம்பொன் போன்ற துளசிமாலையைப் பெற எண்ணிப் பேசுகிறாள் அவள், என் மகள் இப்படி வருந்துவதைக் காண்பதற்கு நான் என்ன தீவினைகளைச் செய்தேனோ!

•••

பாடல் - 4

கோதுஇல வண் புகழ் கொண்டு சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதுமால், ஊழ்வினையேன் தடம்தோளியே.

(தாய் சொல்கிறார்)

என்னுடைய மகள், பெரிய தோள்களைக் கொண்டவள், எம்பெருமான் மீது நேசம் வைத்துள்ளாள்.

சமயவாதிகள் எம்பெருமானின் குற்றமில்லாத சிறந்த புகழைச் சொல்லிப் போற்றுவார்கள், அந்தக் குணங்கள் மற்ற குணங்களுடன் வேறுபடுவதைச் சொல்லிப் பிதற்றுவார்கள், அத்தகைய தலைவன், உயர்ந்த இறைவன், அவனது திருவடிகளின்மேல் விளங்கும் அழகிய, பசும்பொன்போன்ற துளசிமாலையைப் பெற எண்ணிப் பேசுகிறாள் அவள்.

என் மகள் இப்படி வருந்துவதைக் காண நான் என்ன ஊழ்வினைகளைச் செய்தேனோ!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT