நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து மூன்றாம் திருவாய்மொழி பாடல் - 7,8

திருவடியை நீட்டி உலகை

செ.குளோரியான்


பாடல் - 7

குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட கோல வாமனா,
குரைகழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே,
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும்
உரைகொள் சோதித் திரு உருவம் என்னது ஆவிமேலதே.

ஒலிக்கின்ற வீரக்கழல்கள் அணிந்த திருவடியை நீட்டி உலகை அளந்து ஏற்றுக்கொண்டவனே, அழகிய வாமனனே, ஒலிக்கின்ற வீரக்கழல்கள் அணிந்த உன் திருவடியைக் கை கூப்பி வணங்குபவர்கள் உன்னை அடைவார்கள், அவ்வாறு அவர்களுக்கு அருள்புரிய நின்ற மாயனே, நறுமணம் மிகுந்த பூக்களையும் நீரையும் தூவி நான் உன்னைத் துதிக்கவில்லை, ஆனாலும், வேதங்களால் உரைக்கப்படுகின்ற ஒளிவடிவான உன்னுடைய திருமேனி, என் உயிரில் நின்று திகழ்கிறதே!

*******

பாடல் - 8

என்னது ஆவி மேலையாய், ஏர்கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்,
உன்னது என்னது ஆவியும், என்னது உன்னது ஆவியும்,
இன்னவண்ணமே நின்றாய் என்று உரைக்கவல்லனே?

என்னுடைய உயிர்மேல் காதல்கொண்டவனே, அழகு பொருந்திய ஏழு உலகங்களிலும் நிறைந்து, அனைத்துமாகத் திகழ்கிற சோதிவடிவான ஞானமூர்த்தியே, என்னுடைய உயிர் உன்னுடையது, உன்னுடைய உயிர் என்னுடையது, நீ இந்தத் தன்மையில்தான் திகழ்கிறாய் என்று என்னால் சொல்ல இயலுமா? (இயலாது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT