பாடல் - 9
உரைக்கவல்லன் அல்லேன், உன் உலப்புஇல் கீர்த்தி
வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல்
ஏறினேன்,
புரைப்பு இலாத பரம்பரனே, பொய்இலாத பரம்சுடரே,
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.
எம்பெருமானே, குற்றமில்லாத உயர்ந்த தெய்வமே, பொய்யில்லாத உயர்ந்த சுடரே, உன்மேல் நான் காதல் கொண்டேன், அந்த மயக்கத்தில் திளைக்கிறேன், எல்லையில்லாத உன்னுடைய புகழ்வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படுகிற நான் எப்போது கரையேறுவேன்? பெருமானே, உன் புகழைச்சொல்லும் வல்லமை எனக்கு இல்லை. நல்ல, உயர்ந்த மக்கள் சத்தமிட்டு உன் பெருமைகளைப் போற்றினார்கள், நானும் அவர்களோடு சேர்ந்து போற்றுகிறேன்.
******
பாடல் - 10
யானும் ஏத்தி, ஏழ் உலகும் முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்திலும், தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்?
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன், யான் உய்வானே.
எம்பெருமானின் பெருமைகள் போற்றப்போற்றத் தீராது, நான் போற்றினாலும், ஏழு உலகங்களில் உள்ள அனைவரும் போற்றினாலும், பின்னர் அவனே தன்னைப் போற்றினாலும், அந்தப் போற்றுதல் என்றென்றும் தொடரும், எப்போது முடியும்? (முடியாது.) அப்படியானால் அவனை நான் ஏன் போற்றுகிறேன்? நான் உய்ய வேண்டும். அதற்காக, தேனாகவும் பாலாகவும் கரும்பாகவும் அமுதமாகவும் தித்திக்கின்ற நம் தலைவனை நான் போற்றுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.