பாடல் - 9
என் அப்பன் எனக்காய், இகுளாய், என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என் அப்பனுமாய்,
மின்னப் பொன்மதிள்சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்,
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே.
என் தந்தை, தோழி, என்னைப் பெற்ற தாய், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், அனைத்தும் எம்பெருமானே, ஒளிவீசும் அழகிய மதிள்சுவர்களால் சூழப்பட்ட திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் அப்பன், தனக்கு ஒப்பாக யாரும் இல்லாத அப்பன் எனக்குத் தன்னுடைய திருவடி நிழலைத் தந்தான்.
***
பாடல் - 10
நிழல், வெய்யில், சிறுமை, பெருமை, குறுமை,
நெடுமையாய்ச்
சுழல்வன, நிற்பன, மற்றுமாய், அவை அல்லனுமாய்,
மழலைவாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னுபிரான்
கழல்கள் அன்றி மற்று ஓர் களைகண் இலம், காண்மின்களே.
நிழல், வெய்யில், சிறுமை, பெருமை, குறுகுதல், நீள்தல், அசையும் பொருள்கள்,
அசையாப்பொருள்கள், மற்றவை, அவை அல்லாதவை என அனைத்தும் எம்பெருமானே, இளைய, இனிய பாடலைப் பாடும் வண்டுகள் வாழும் திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் பெருமானுடைய திருவடிகளையன்றி நமக்கு இன்னொரு பற்றுக்கோடு இல்லை, காணுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.