நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

எம்பெருமானின் செங்கனி

செ.குளோரியான்


பாடல் - 3

செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா அறாத
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ,
நாணும் நிறையும் இழந்ததுவே.

தோழீ, எம்பெருமானின் செங்கனி வாயிலும் செஞ்சுடராக ஒளிவீசும் நீண்ட திருமுடியிலும் என் நெஞ்சம் ஈடுபட்டுவிட்டது, அவருடைய சங்கு, சக்கரத்தைக் கண்டு மகிழ்கிறேன், தாமரைபோன்ற திருக்கண்களில் என்னை இழக்கிறேன், மாதந்தோறும், நாள்தோறும் விழாக்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும் தென் திருப்பேரெயிலிலே வீற்றிருக்கும் நம் பிரானை எண்ணி, நான் என்னுடைய நாணத்தையும் அடக்கத்தையும் இழந்தேன்.

***

பாடல் - 4

இழந்த எம் மாமைத்திறத்துப் போன
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ,
ஓதக் கடல் ஒலிபோல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்,
அன்னையர்காள், என்னை என் முனிந்தே.

எம்பெருமானை எண்ணி நான் என்னுடைய மாமை நிறத்தை இழந்தேன். அதனைத் திரும்பப் பெறுவதற்காக என் நெஞ்சை அவரிடம் அனுப்பிவைத்தேன், ஆனால் அந்த நெஞ்சும் அங்கேயே தங்கிவிட்டது, வருந்திநிற்கும் நான் இனி யாரிடம் பேசுவேன், என்ன செய்வேன்? அலைவீசும் கடலோசைபோல் எங்கும் நல்ல வேத ஒலி ஓங்குகிற தென் திருப்பேரெயிலிலே வீற்றிருக்கும் பெருமான், முழங்குகின்ற சங்கைக் கையில் ஏந்தியவன், அவனுடைய மாயத்தில் நான் ஆழ்ந்தேன், அன்னையரே, என்மேல் கோபித்து என்ன பயன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT