பாடல் 4
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்,
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்,
அதிர் குரல் முரசங்கள் அலைகடல் முழக்கு ஒத்த,
மது விரி துழாய்முடி மாதவன் தமர்க்கே.
தேனோடு மலர்கிற திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்த மாதவனுடைய அடியவர்களைத் தேவர்கள் எதிர்நின்று வரவேற்றார்கள், அவர்கள் தங்குவதற்கான இடம் வகுத்தார்கள், பன்னிரண்டு சூரியர்களும் தங்களுடைய கைகளைக் காட்டியபடி அவர்களை அழைத்துச்சென்றார்கள், அதிர்கின்ற முரசுகள் அலைகடலின் முழக்கத்தைப்போல் ஒலியெழுப்பின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.